Namma Tiruttani @tiruttaninews
tiruttani news

திருத்தணியில் கார் மீது வேன் மோதிய விபத்தில் குஜராத்தை சேர்ந்த 4 போ படுகாயம்

Tiruttaninews.com

திருத்தணி அக்25- திருத்தணியில் இன்று காலை கார் மீதுவேன் மோதிய விபத்தில் காரில் பயனம் செய்த குஜராத்சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து
பற்றிய விவரம் வருமாறு- குஜராத் மாநிலம் கோத்திரியைசேர்ந்த பொறியாளர் ஷாமிலோடியா வயது 38). இவரதுமனைவி எய்த்தல் (வயத 30 தந்தை லலித்லோடியாவயது68).சகோதரர் உறார்திக்லோடியா வயது 33). இவர்கள்
அணைவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லவேண்டி குஜராத்தில்இருந்து சென்னைக்கு விமானத்தில்வந்தனர். பிறகு சென்னையில் இருந்து வாடகை கார் அமர்த்திக் கொண்டு திருப்பதிக்கு புறப்பட்டனர்.

tiruttani news

காரை திண்டிவனம் சேர்ந்த ரமேஷ் வயது 38) என்பவர் ஓட்டிவந்தார். அவர்கள் திருத்தணியில் உள்ள இரண்டாவதுபைபாஸ் சாலை அருகே திருப்பதி சாலையில் செல்லும் போது எதிரே திருத்தணிக்கு வந்துக் கொண்டிருந்த தனியார்ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் கம்பெனிக்கு சொந்தமானவேன் பயங்கராமாக மோதியது. இதில் அந்த கார் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தினால் காரில் பயனம்
செய்த ஷாமிலோடியா, எய்த்தல். லலித்லோடியாஉறார்த்திக்லோடியா மற்றும் கார் டிரைவர் ரமேஷ்ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.இதைப்விபத்தைபார்த்தஅந்த பகுதி மக்கள் அவர்கள் அணைவரையும்
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவ மணைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து பிறகு மேல்
சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

tiruttani news