Namma Tiruttani @tiruttaninews
tiruttani 1

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரைவை துவக்கம் கலெக்டர் மகேஸ்வரி துவக்கிவைத்தார்

Tiruttaninews.com

திருத்தணி நவம்பர் 2- திருத்தணி தாலுக்கா திருவாலங்காட்டில் உள்ள
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டிற்க்கான கரும்பு
அரவை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி துவக்கி வைத்தார்
இதற்க்காக ஆலையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நிகழ்ச்சியில்அவர்
கலந்து கொண்டு கரும்புகளை அரைவை இயந்திரத்தின் போட்டு அரவையை
துவக்கி வைத்தார். அதன் பிறகு கலெக்டர் மகேஸ்வரி நிருபாகளிடம்
கூறியதாவது ” திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2019-20 ஆம்
பருவ ஆண்டிற்க்கான கருப்பு அரைவை துவக்கப் பட்டுள்ளது. இந்த
ஆலையில் உள்ள அரவை இயந்திரங்கள் நாள் ஒன்றுக்கு 2500 டன் கரும்பு
என ஒரு வருடத்திற்க்கு 4 லட்சத்து 30 ஆயிரம் டன் கரும்பை அரைவை
செய்யும் திறன் கொண்டதாகும். இந்த ஆலையில் மொத்தம் 35 ஆயிரம்
உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்டு ஒன்றுக்கு 2 ஆயிரத்து ஐநுாரு
( 2500 முதல் மூன்று ஆயிரம் (3000 விவசாயிகள் வரை தாங்கள் பயிரிடும்
கரும்பை திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அளித்து வருகிறார்கள்
அந்த வகையில் ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு மத்திய
அரசு அறிவித்த படி ஒரு டன் டன் கரும்புக்கு 2612 ரூபாய் 50 காசுகள்
விதம் 68 கோடி 21 லட்சம் ரூபாய்கள் பட்டுவாடா செய்யப் பட்டுள்ளது
இந்த வருடம் இந்த ஆலையில் 1 லட்சத்து 3 ஆயிரம் டன் கரும்பு
அரைவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்arது” என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் சித்ரா
ஆவின் நிர்வாக குழு உறுப்பினர் பொன்னுரங்கம், துணை தவர்
ஜெய்சங்கர் மற்றும் குழு உறுப்பினர்கள் அதிகாரிகள் அகியோர் கலந்து
கொண்டனர்