Namma Tiruttani @tiruttaninews
tiruttani murugan temple

திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா,லட்சார்சனை பூஜைகள் தொடங்கியது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Tiruttaninews.com

திருத்தணி அக்டோபர் 28- திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி
திருக்கோவிலில் இன்று திங்கட்கிழமை கந்தசஷ்டி விழா சிறப்பாக
தொடங்கியது. இந்த விழாவையொட்டி கோவில் முழுவதும் மலர்களால்
அ அலங்கரிக்கப்பட்டிருந்தது கந்த சஷ்டி விழாவுக்காக கோவிலில் உள்ள தேவர்
மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த ஷன்முகர் சன்னிதியில் சுவாமிக்கு சிறப்பு
மலர் அலங்காரம் செய்து வில்வ இதழ்களை கொண்டு சண்முக பெருமானுக்கு
லட்சார்சனை பூஜைகள் நடத்தப் பட்டது

tiruttani murugan temple

விழாவில் ஆயிரக்கணக்கானபக்தர்கள் விரதம் இருந்து விடியற் காலை முதலே கோவிலுக்கு வந்து முருகப் பெருமானையும் ஷன்முகரையும் தரிசித்து சிறப்பு வழிபாடு பூஜைகள் நடத்திக் கொண்டார்கள் விழாவையொட்டி கோவிலில் மூலவர் முருகப்பெருமான் பெருமானுக்குமுதல் நாள் விழாவையொட்டி சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்து ஆராதனைவழிபாடு பூஜைகள் நடத்தப் பட்டது விழாவுக்கு தேவையான ஏற்பாடுகளைகோவில் தக்கார் ஜெயசங்கர் இணை ஆணையர் பழனிகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.