Namma Tiruttani @tiruttaninews

திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் பெருமாள்பட்டு ஊராட்சியில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிப்பு பணிகள் மாவட்ட ஆட்சியர் தலைவர் தொடக்கி வைத்தார்

Tiruttaninews.com

திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் பெருமாள்பட்டு ஊராட்சியில் கிராம பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்பில் திருக்கண்டீஸ்வரர் கோயில் குளத்தை தூர்வாரி வேம்பு புங்கன் பனை விதை மரக்கன்றுகள் உள்பட்ட மரக்கன்றுகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மகேஸ்வரி ரவி குமார் அவர்கள் இன்று நடவு செய்து பராமரிக்கும் பணிகளை துவக்கி வைத்தார்கள்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக வேம்பு புங்கன் பாதம் வாதநாராயணன் மரக்கன்றுகள் உள்ளிட்ட மரக்கன்றுகள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நடவு செய்து பராமரிக்கும் பணிகளை துவக்கி வைத்து கூறியதாவது

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மஞ்சு ரங்கனை மற்றும் 43 பணப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஏரிகளை குடிமராமத்து திட்டப்பணிகள் வாயிலாக தூர்வாரி ஆழப்படுத்த பொதுப்பணி துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது அவற்றில் 30 ஏரிகளை குடிமராமத்து திட்டம் இந்த ஆண்டு தூர்வார அதற்கான அரசாணை பெறப்பட்டுள்ளது கடந்த ஆண்டு 62 ஏரிகளை குடிமராமத்து திட்டத்தில் தூர்வாரப்பட்டு உள்ளது நீர் மேலாண்மை திட்டத்தால் (water management) கடந்த பல வருடங்களுக்குப் பிறகு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவிலான ஏரிகள் குளங்கள் உள்ளன. இதற்காகவே ஏரிகளின் மாவட்டம் என்றழைக்கப்படுகிறது. மாவட்டத்தில் 3600 குளம் குட்டை மற்றும் 620 சிறுபாசன ஏரிகளும் உள்ளன அவற்றில் 190 சிறுபாசன ஏரிகளும், 1200 ஊர் அணிகளும் தூர்வாரி ஆழப்படுத்தும். தன்னார்வலர்கள் பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடனும் மூலமாகவும் தூர்வாரும் பணிகள் நடைபெற உள்ளது மேலும் பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஊராட்சிகளில் உள்ள அனைத்து குளம் குட்டைகளை மற்றும் ஊரணிகள் ஆகியவற்றை தங்களின் பங்களிப்புடன் தூர் வாரி கரைகளை பலப்படுத்தி கொள்ள வேண்டும் இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் திரு பி வி ரமணா கலந்து கொண்டார்.