பருவநிலை மாற்றத்தின் உச்சகட்ட புள்ளியை பூமி ஏற்கனவே தொட்டு விட்டாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பல்வேறு காரணங்களால் பூமி வெப்பமடைவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பனி உருகுதல், அதிக வெப்பம், கடுங்குளிர் போன்றவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பருவநிலை மாற்றத்தை டிப்பிங் பாயின்ட் என்ற அளவீட்டு முறை மூலம் விஞ்ஞானிகள் அளந்து வருகின்றனர்.
இந்நிலையில் டோமினோ விளைவு எனப்படும் சங்கிலித் தொடர் போன்ற நிகழ்வுகளால் பூமி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், டிப்பிங் பாயிண்ட் முறையில் ஏற்கனவே உச்சபட்ச அளவான 9 புள்ளிகளை எட்டி விட்டதாகவும் இங்கிலாந்தின் எக்ஸடர் பல்கலைக்கழக பேராசிரியர் டிம் லென்டான் தெரிவித்துள்ளார். இதனால் வரும் காலங்களில் பாதிப்புகள் அதிகம் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்