Namma Tiruttani @tiruttaninews
tiruttani 1

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

Tiruttaninews.com

திருவள்ளூர் மாவட்டத்தில் வித்யசுதா, சிறப்பு குழந்தைகளுக்கான ஸ்ரீ ராமச்சந்திரா கல்வ நிலையமும், ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனமும் இணைந்து வருகிற 08.11.2019 அன்று காலை சுமார் 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்குவது குறித்த பயனாளிகள் கண்டறிதல் முகாம் போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை வளாகத்திலுள்ள வித்யசுதா ஆரம்ப கால பயிற்சி
மையத்தில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பார்வை திறன் குறைபாடு (Visually Impaired), செவித்திறன் குறைபாடு (Hearing Impaired), உடல் இயக்க குறைபாடு
(Orthopedically Handicapped) மற்றும் மனவளர்ச்சி குறைபாடு (Intellectual Disability)
கொண்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு தேவையான உதவி அளிக்க
உபகரணங்கள் ஏதுவாக கண்டறிதல் நடைபெற உள்ளதால் மேற்படி முகாமில் கலந்து
கொள்ள விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் போரூர் வித்யசுதா ஆரம்பகால பயிற்சி மையம், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை என்ற முகவரிக்கு நேரடியாக வந்து பின்வரும் ஆவணங்களை சமர்பித்து முன்பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

சமர்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் விழுக்காடும் அதற்கு மேல் விழுக்காடுமுள்ள
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளியின் வீட்டு முகவரி நகல், சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி அல்லது அவருடைய பெற்றோர் / காப்பாளர் அவர்களின் மாத வருமானச் சான்றிதழ் நகல் (வருவாய் துறை மூலமாக வழங்கப்பட்டது அல்லது பாராளுமன்ற உறுப்பினர் (MP) / சட்டமன்ற உறுப்பினர் (MLA) / ஊராட்சி தலைவர் / உள்ளாட்சி
தலைவர்கள் கையொப்பமிடபட்ட சான்றிதழ் அல்லது வேறு ஏதேனும் வருமானம் குறித்த சான்று), சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளியின் புகைப்படம் 2

குறிப்பு: சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி அல்லது அவருடைய பெற்றோர்
காப்பாளர் அவர்களின் மாத வருமானம் ரூ.15,000-க்குள் இருக்கும் பட்சத்தில், மத்திய அரசு நிர்ணயித்தப்படி உதவி உபகரணங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். மேற்படி நபர்களின் மாத வருமானம் ரூ. 15,001 முதல் ரூ.20,000 வரை இருக்கும்பட்சத்தில், 50% மானியத்துடன் உதவி உபகரணங்கள் வழங்கப்படும்.

இம்முகாம் குறித்து மேற்கொண்டு தகவலை பெறவிரும்பினால், வித்யசுதா ஆரம்பகால பயிற்சிமைய நிர்வாக அலுவலர் திரு.அ.அருண் அலோசியஸ் மகேஷ் அவர்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ (தொலைபேசி எண்கள்: 044-45928569, 24768403) தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட
ஆட்சித்தலைவர் ரவிக்குமார் திருமதி.மகேஸ்வரி
அவர்கள் தெரிவிக்கிறார்