Namma Tiruttani @tiruttaninews

திருத்தணி டாக்டர்‌ ராதாகிருஷ்னன்‌ அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.2 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ ஆர்‌.ஓ. குடிநீர்‌ வசதி

Tiruttaninews.com

திருத்தணி ஜனவரி27- திருத்தணியில்‌ உள்ள டாக்டர்‌ ராதாகிருஷ்னன்‌ அரசினர்‌ மேல்நிலைப்‌ பள்ளியில்‌ 2 ஆயிரத்துக்கும்‌ மேற்பட்ட மாணவர்கள் படித்து
வருகிறார்கள்‌.அவர்களுக்கு சுகாதாரமான குடிநீர்‌ வழங்க ஏற்பாடு செய்து தரவேண்டும்‌ என பள்ளியின்‌ பெற்றோர்‌ அசிரியர்‌ சங்க தலைவர்‌ குப்பு சாமி தலைமை ஆரிரியர்‌ பாலசுப்பிரமணியம்‌ மற்றும்‌ ஆசிரியிர்கள்‌ ஆகியோர்‌
திருத்தணி எம்‌எல்‌ஏ பி.எம்‌. நரசிம்மனிடம்‌ கோரிக்கை மனு அளித்தனர்‌. இதை ஏற்றுக்கொண்ட எம்‌எல்‌ஏ நரசிம்மன்‌ தனது திருத்தணி தொகுதி மேம்பாட்டு நிதியின்‌ கீழ்‌ பள்ளியில்‌ 2 லட்சம்‌ ரூபாய்‌ செலவில்‌ ஆர்‌ஓ பிளான்ட்‌ (குடிநீர்‌ சுத்தீகரிப்பு இயந்திரம்‌ மற்றும்‌ நீர்‌ தொட்டி அமைக்க ஏற்பாடு செய்து கொடுத்தார்‌.

இதன்‌ தொடர்பாக ஏற்பாடு செய்யப்‌ பட்ட விழாவில்‌ எம்‌எல்‌ஏ பி.எம்‌. நரசிம்மன்‌ கலந்துகொண்டு குடிநிர்‌ சுத்தீகரிப்பு இயந்திரத்தை துவக்கி வைத்து மாணவர்களுக்கு குடிநீர்‌ வழங்கினார்‌. விழாவில்‌ பள்ளியின் பெற்றோர்‌ ,ஆசிரியர்கள் கழக தலைவர்‌ குப்புசாமி ,திருத்தணி கல்வி மாவட்ட பள்ளிகளின்‌ தலைவர்‌ இளங்கோ மற்றும்‌ ஆசிரியர்கள் மாணவர்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.