Namma Tiruttani @tiruttaninews

குளிர்சாதன வசதியுடன் கூடிய புதிய பேருந்துகளை அமைச்சர் பெருமக்கள் துவக்கி வைத்தனர்.

Tiruttaninews.com
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில், குளிர்சாதன வசதியுடன் கூடிய புதிய பேருந்துகளை மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர் திரு.பா.பென்ஜமின் அவர்கள் மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி கலை பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு.க.பாண்டியராஜன் அவர்கள் மற்றும் ஆட்சித் தலைவர் இன்று மாவட்ட திருமதி.மகேஸ்வரி ரவிக்குமார்,இ.ஆ.ப.., ஆகியோர் (12.11.2019) துவக்கி வைத்து, வழித்தடங்களுக்கு வழியனுப்பி வைத்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
செங்கல்பட்டு மாவட்டத்தின் போக்குவரத்து தேவையை நிறைவேற்றும் பொருட்டு விழுப்புரம் தந்தை பெரியார் போக்குவரத்து கழகம் திலிருந்து வேலூர் பட்டுக்கோட்டை அழகிரி போக்குவரத்து கழகத்திலிருந்தும் தடங்களை பிரித்து, காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு புரட்சித் தலைவர்
எம்.ஜி.ஆர் போக்குவரத்து கழகம் 01.04.1992 அன்று 638 பேருந்துகளுடன் துவக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்திற்கான தனியாக ஒரு மண்டலம் ஆகஸ்ட் 2008 முதல் பணிமனைகளின் 252 பேருந்துகளுடனும் திருவள்ளுவர் தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.
 
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழு) லிட்., திருவள்ளுர் மண்டலம் மூலம் 74 நகர பேருந்துகள், 155 புறநகர் பேருந்துகள், 23 மாற்றுபேருந்துகள் என தற்பொழுது 252 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இதில் 59 புதிய பேருந்துகள் ஆகும்.
தற்பொழுது ரூ. 3 கோடியே 30 இலட்சம் செலவில் 4 பேருந்துகள் சென்னை -திருப்பதி வழி திருத்தணி எனவும், 2 பேருந்துகள் சென்னை -திருப்பதி வழி காளஹஸ்தி எனவும், 5 பேருந்துகள் சென்னை நெல்லூர் என மொத்தம் 11 பேருந்துகள் குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன வசதியுள்ளபேருந்துகள் (AC Bus) மக்கள் பயன்பெறும் வகையில் இயக்கப்படுகிறது. பயணிகளுக்கு நிறைவான சேவை”, “பணியாளர்கள் சீரிய பணி”, “என்றும் பாதுகாப்பான பயணம்” என்ற குறிக்கோள்களுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) லிமிடெட், திருவள்ளூர் மண்டலம் செயல்பட்டு வருகிறது என் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்செய்தியாளர்களிடம் கூறினார்.
 
இந்நிகழ்ச்சியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.பலராமன், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.வித்யா, திருவள்ளூர் நகராட்சி ஆணையர் திருமதி.மாரிச்செல்வி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருவள்ளுர் மண்டல துணை மேலாளர் (வணிகம்) திரு.எம்.ராஜசேகரன், துணை மேலாளர் (தொமில்நுட்பம்) திரு.கணபதி கோட்ட மேலாளர் திரு.ஆர்.சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.