Namma Tiruttani @tiruttaninews
tiruttani 1

திருத்தணியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா !

Tiruttaninews.com
திருத்தணி நவம்பர் 22- திருத்தணியில் உள்ள அமிர்தாபுரத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற முன்னாள் எம் பி கோ. அரி தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்
அளித்த எட்டு லட்சத்து ஐம்பது ஆயிரம் ( 8லட்சத்து 50 ஆயிரம்) ரூபாய் நிதியில் கட்டப் பட்ட புதிய அங்கன்வாடி மைய்ய கட்டிட திறப்பு விழா சிறப்பாக நடத்தப்பட்டது.
இந்த விழாவில் முன்னாள் எம்பி கோ அரி கலந்து கொண்டு அங்கன்வாடி மைய்ய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். இந்த விழாவில் திருத்தணி நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி. ராஜலட்சுமி நகராட்சி முன்னாள் தலைவர் சவுந்தர்ராஜன் வேளான்மை கூட்டுறவு சங்க தலைவர் புஷ்பராஜ், திருத்தணி கூட்டறவு சர்க்கரை ஆலை தலைவர் பொன்னுரங்கம் மாவட்ட முன்னாள் கவுன்சிலர் டி டி.சீனிவாசன். கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஜெயசேகர்பாபு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
HTML5 Icon