Namma Tiruttani @tiruttaninews
tiruttani news

பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்க தொகை நியாய விலை கடைகளில் வழங்கப்படவுள்ளது.

Tiruttaninews.com

திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள5,65,363 மின்னணு குடும்பஅட்டைதாரர்களுக்கு பொங்கல் – 2020 திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக 1 கிலோபச்சரிசி, 1 கிலோ சர்க்கரை இரண்டு அடி நீள கரும்புத்துண்டு தலா 20 கிராம் முந்திரி, 20கிராம் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசி தொகுப்பும்,ரொக்க தொகை ரூ.1000/-மும் ஒரே நேரத்தில் நியாய விலை கடைகள் மூலமாக09.01.2020 முதல் தொடங்கி 12.01.2020 தேதிக்குள் வழங்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்புமற்றும் ரொக்கத் தொகை பெறாத விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 13.01.2020 அன்றுடன்முழுமையாக வழங்கி முடிக்கப்படும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறும் மின்னணு குடும்ப அட்டைதாரர்கள் ஒரு துணிப்பை எடுத்து வர வேண்டும். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வந்தாலும்பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். நெரிசிலினை தவிர்க்கும் பொருட்டு ஒரு நாளைக்குசுமார் 200 முதல் 250 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்க தொகைவழங்கப்படும். அதன் விவரம் முன்கூட்டியே சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் ஒட்டி விளம்பரப்படுத்தப்படும் .

பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நாட்களில் நியாயவிலைக்கடைகள் சரியாக 8.30 மணிமுதல் நண்பகல் 12.30 மணிவரையிலும், பிற்பகல் 1.30மணிமுதல் மாலை 5.30 மணிவரையில் திறக்கப்பட்டு தவறாமல் செயல்படும்.
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை ரூ.1000/- வழங்குவதற்க்கு மின்னனுகுடும்ப அட்டை சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடையின் விற்பனை முனைய இயந்திரத்தில் பதிவு செய்யப்படும்.அவ்வாறு குடும்ப அட்டை நேரில் காண்பிக்க இயலாத இடங்களில் , அவர்களுக்கு, அக்குடும்ப அட்டையில் உள்ள நபர்கள் ஏதேனும் ஒருவரின் ஆதார்அட்டையை வைத்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு வரும் “ஒரு உரியகடவுச்சொல் (OTP)” அடிப்படையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இதற்கு உரியபதிவுகள் ஒப்புதல் படிவத்தில் பதிவுத்தாளில் குறிப்பிடப்படும்.மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு சம்மந்தப்பட்ட தகவல் / புகார் ஏதேனும் இருப்பின்அதனை தெரிவிக்க வேண்டிய வட்ட எண்கள் மற்றும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்ஆகியவைஅளிக்கப்பட்டுள்ளதுஎன்மாவட்டஆட்சித்தலைவர்திருமதி.மகேஸ்வரிரவிக்குமார். IAS., அவர்கள் தெரிவித்தார்.