editor

26 posts

tiruttani news

மார்ச் முதல் மே வரை வெப்பம் அதிகரிக்கும்:

இந்தியாவில், வரும் மார்ச் முதல், மே வரை, வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்திய வானிலை ஆய்வு மையம், நேற்று அளித்த தகவலின் அடிப்படையில், இந்தியாவின் மேற்கு, வடமேற்கு, மத்திய மற்றும் தென் பகுதிகளில் மார்ச் முதல், மே வரை, வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை அதிகமாக பதிவாகும். பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், டில்லி, உத்தரகண்ட், ஹரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், குஜராத், மத்திய […]

tiruttani news

அமெரிக்க அதிபர் டிரம்பை கௌரவப்படுத்த 3 பிரமாண்ட இட்லியை உருவாக்கிய உணவு கலைஞர்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வரவேற்க சென்னை உணவு கலைஞர் 107 கிலோ கொண்ட 3 பிரமாண்ட இட்லிகளை தயாரித்துள்ளார் . இந்தியா வந்துள்ள டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோருடன் மகள் இவான்கா மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னருடன் விருந்தளிக்கும் வகையில், சென்னையை சேர்ந்த உணவு கலைஞர் ஒருவர் சுமார் 107 கிலோ உடைய 3 மெகா சைஸ் இட்லிகளை தயாரித்துள்ளார்.சென்னையை […]

tiruttani news

ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான 3,500 டன் தங்கம்: உ.பி.யில் இரு வேறு இடங்களில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு

உ.பி..யில் 3,500 டன் தங்கம் உள்ளடக்கிய இரண்டு தங்கச் சுரங்கங்களை இரு வேறு இடங்களில் இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சோன்பத்ரா மாவட்டம் மேற்கில் மத்தியப் பிரதேசம், தெற்கில் சத்தீஸ்கர், தென்கிழக்கில் ஜார்கண்ட் மற்றும் கிழக்கில் பிஹார் ஆகிய நான்கு மாநிலங்களை எல்லையாகக் கொண்டது. இயற்கை எழில்மிக்க இம்மாவட்டம் விந்திய மலைகள் மற்றும் கைமூர் மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. பாக்சைட், சுண்ணாம்பு, […]

tiruttani news

கொரோனா வைரஸ்.. சென்னையில் தடுப்பு நடவடிக்கை..!

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல்  தடுக்க சென்னை விமான நிலையத்திலும் பயணிகளுக்கு, தெர்மல் ஸ்கிரீனிங் எனப்படும் வெப்பசார் உடல் பரிசோதனை நடத்தப்படுகிறது.   சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று இந்திய அரசும் சீனாவுக்கு செல்லும் இந்திய பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்நாட்டில் நோய் தோற்று உள்ளவர்கள், சளி தொந்தரவு உள்ளவர்கள் ஆகியோருடன் நெருங்கி பழக வேண்டாம் என்றும், சீனாவில் இருக்கும் […]

tiruttani news

விண்வெளிக்கு அனுப்பப்படும் பெண் ரோபோவை அறிமுகம் செய்தது இஸ்ரோ

ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்பப்படும் பெண் ரோபோ வியோ மித்ராவை பெங்களூருவில் அறிமுகம் செய்து வைத்தது இஸ்ரோ…  விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ககன்யான் திட்டத்தை விரைவில் செயல்படுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், விண்வெளிக்கு செல்லும் மனிதர்கள் அங்கு உள்ள தட்பவெட்ப நிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை எப்படி எதிர்கொள்வது என தெரிந்து கொள்வதற்காக, மனித உடல் அமைப்பை அப்படியே கொண்ட பெண் […]

tiruttani news

கொரோனோ வைரஸ்( corona virus):

சீனாவில் கொரோனோ வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.  கடந்த 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சீனா மற்றும் ஹாங்காங்கில் சார்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டது.  இதற்கு 650 பேர் வரை பலியாகினர்.  வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் இந்நோய் சுவாசத்தில் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தி மனிதர்களில் மரணம் விளைவிக்கும்.   இந்த நிலையில், சீனாவில் சார்ஸ் SARS வைரசுடன் தொடர்புடைய புதிய வகை கொரோனா வைரஸ் கடந்த வாரத்தில் 140 பேரிடம் […]

tiruttani news

நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்.. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்கப்படவேண்டும்:

நாடு முழுக்க அனைத்து பகுதிகளிலும், ஜனவரி 19ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையான நாளை, போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. இளம்பிள்ளைவாத நோயைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த 1995ம் ஆண்டு முதல் வழங்கப்படுவது போலியோ சொட்டு மருந்து. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த சொட்டு மருந்து கொடுப்பது கட்டாயமாகும்.1998ம் ஆண்டுக்கு பிறகு, தமிழகத்தில், போலியோ பாதிப்பு எந்த ஒரு குழந்தைக்கும் ஏற்படவில்லை. ஆனால், போலியோ நோய்க் கிருமியின் தாக்கம் இனியும் […]

tiruttani news

போகி பண்டிகையின்போது பிளாஸ்டிக், டயர்களை எரித்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரிக்கை

போகி பண்டிகையின்போது, காற்று மாசுவை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர்களை எரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரித்துள்ளார். நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடி வந் துள்ளனர். அவர்கள் வைக்கோல் போன்ற இயற்கையான பழைய பொருட்களை எரித்து வந்ததால் காற்று மாசுபடாமல், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் […]