News

75 posts

Updates

திருத்தணியில் 3 ஆயிரம்‌ லிட்டர்‌ ஊரல்‌ சாராயம்‌ பதுக்கிய 2 பேர் கைது, ஒருவருக்கு வலை வீச்சு.

திருத்தணி அருகே கள்ளச்‌ ‌ சாராயம்‌ காய்ச்சுவதற்க்காக தண்ணீர்‌ டேங்கரில்‌ 3 ஆயிரம்‌ லீட்டர்‌ ஊரல்‌ சாராயம்‌ பதுக்கிய 2 நபர்களை மது விலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்தனர்‌. திருத்தணி அருகில்‌ உள்ள பொன்பாடி மேட்டு காலனியில்‌ கள்ளச்‌ சாராயம்‌ காய்ச்சுவதாக ரகசிய தகவல்‌ கிடைத்தது. இதையொட்டி திருவள்ளூர்‌ மாவட்ட மதுவிலக்கு அமல்‌ பிரிவு உதவி போலீஸ்‌ சூப்பர்டென்ட் ‌ கல்பனா உத்தரவின்‌ பேரில்‌ திருத்தணி மதுவிலக்கு […]

திருத்தணி ஏழைகளுக்கு இலவச உணவு வழங்க ஏற்பாடு; முன்னாள்‌ எம்பி கோ.அரி உரிய தொகயை செலுத்தினார்‌.

கொரோனோ பாதிப்பு நிவாரண பணிகள்‌ காரணமாக அம்மா உணவகத்தில்‌ ஏழைளுக்கும்‌ பாதசாரிகளுக்கும்‌ தினமும்‌ இலவசமாக உணவு அளிக்கப்‌ ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது . இதையொட்டி வருகிற மே மாதம்‌ 3 ஆம்‌ தேதி வரை ஊரடங்கு உத்தரவு முடியும்‌ வரையில்‌ திருத்தணியில்‌ உள்ள அம்மா உணவகத்தில்‌ ஏழைகளுக்கு இலவச உணவ்ளிக்க முன்னாள்‌ எம்பி கோ.அரி அதற்க்கு உண்டான தொகயை திருத்தணி நகராட்சி ஆணையர் பாகைப்பிரமணியத்திடம்‌ வழங்கினார்‌. இந்த நிகழ்ச்சியின்‌ போது திருத்தணி நகராட்சி […]

tiruttani news

மார்ச் முதல் மே வரை வெப்பம் அதிகரிக்கும்:

இந்தியாவில், வரும் மார்ச் முதல், மே வரை, வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்திய வானிலை ஆய்வு மையம், நேற்று அளித்த தகவலின் அடிப்படையில், இந்தியாவின் மேற்கு, வடமேற்கு, மத்திய மற்றும் தென் பகுதிகளில் மார்ச் முதல், மே வரை, வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை அதிகமாக பதிவாகும். பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், டில்லி, உத்தரகண்ட், ஹரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், குஜராத், மத்திய […]

tiruttani news

திருத்தணி டிவிஷனில்‌, அர்‌.கே.பேட்டை, பள்ளிப்‌ பட்டு ,பகுதிகளில்‌ மின்நிறுத்தம்

திருத்தணி டிவிஷனில்‌ உள்ள. அத்திமாஞ்சேரிபேட்டை, ஆர்கேபேட்டை ,மற்றும்‌ மேலப்பூடி ஆகிய துணை மின்‌ நிலையங்களில்‌ நாளை 29 ஆம்‌ தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள்‌ நடப்பதினால்‌. அன்று அத்திமாஞ்சேரிபேட்டை ,கர்லம்பாக்கம்‌, பெருமாநல்லூர்,‌ நொச்சிலி, கோனசமுத்திரம்,‌பள்ளிப்பட்டு. சாணாகுப்பம்‌, நெடியம்,‌ புண்ணியம்‌. பொதட்டூர்‌பேட்டை. சொரக்காய்‌ பேட்டை. காக்களூர்‌. பாண்டிரவேடு, ஆர்கே.பேட்டை, செல்லாத்தார்‌. கிருஷ்னாகுப்பம்,‌ அம்மையார்குப்பம் தெற்கு பகுதி ,கதனநகரம்‌. ஜனகராஜகுப்பம்,‌ ஆர்‌.எம்‌.குப்பம்‌, சந்திரவிலாசபுரம்‌ ,மேலப்பூடி, கொளத்தூர்‌ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்‌ […]

பள்ளி ஆண்டு விழா

திருத்தணி பிப்‌27:- திருத்தணியில்‌ உள்ள தளபதி வினாயகம்‌ வினாயகம்‌ மேல்‌ நிலைப்பள்ளியின்‌ 25 ஆம்‌ ஆண்டுவிழா மற்றும்‌ ம்‌ மகளிர்‌ கலை அறிவியல் கல்லூரி ‌ முதலாம்‌ ஆண்டு விழா சிறப்பாக நடந்தது. இந்த விழாவிற்கு பள்ளியின்‌ அறக்கட்டளை நிறுவனரும்‌ முன்னாள் ‌ எம்பி யும்‌ . ஆன கிருஷ்ணசுவாமி. பள்ளியின்‌ செயலாளரும்‌ ஆரணி பாராளுமன்ற தொகுதி உறுப்பினரும்‌ ஆன விஷ்னுபிரசாத்‌ ஆகியோர்‌ தலைமை தாங்கினார்கள்‌. பள்ளியின்‌ தாளாளர்‌ பாலாஜி […]

tiruttani news

அமெரிக்க அதிபர் டிரம்பை கௌரவப்படுத்த 3 பிரமாண்ட இட்லியை உருவாக்கிய உணவு கலைஞர்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வரவேற்க சென்னை உணவு கலைஞர் 107 கிலோ கொண்ட 3 பிரமாண்ட இட்லிகளை தயாரித்துள்ளார் . இந்தியா வந்துள்ள டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோருடன் மகள் இவான்கா மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னருடன் விருந்தளிக்கும் வகையில், சென்னையை சேர்ந்த உணவு கலைஞர் ஒருவர் சுமார் 107 கிலோ உடைய 3 மெகா சைஸ் இட்லிகளை தயாரித்துள்ளார்.சென்னையை […]

tiruttani news

ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான 3,500 டன் தங்கம்: உ.பி.யில் இரு வேறு இடங்களில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு

உ.பி..யில் 3,500 டன் தங்கம் உள்ளடக்கிய இரண்டு தங்கச் சுரங்கங்களை இரு வேறு இடங்களில் இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சோன்பத்ரா மாவட்டம் மேற்கில் மத்தியப் பிரதேசம், தெற்கில் சத்தீஸ்கர், தென்கிழக்கில் ஜார்கண்ட் மற்றும் கிழக்கில் பிஹார் ஆகிய நான்கு மாநிலங்களை எல்லையாகக் கொண்டது. இயற்கை எழில்மிக்க இம்மாவட்டம் விந்திய மலைகள் மற்றும் கைமூர் மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. பாக்சைட், சுண்ணாம்பு, […]

திருத்தணி முருகன்‌ கோவில்‌ தேர்‌ வீதியில்‌ சிசிடிவி கேமராக்கள்‌ ஏற்பாடு

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில்‌ உள்ள தேர்‌ வீதியில்‌ கோவில்‌ நிர்வாகம்‌ சார்பில்‌ சிசிடிவி கேமராக்கள்‌ ஏற்பாடு செய்யப்‌பட்டது. கோவிலுக்கு வரும்‌ பக்தர்களுக்கு உரிய தரிசன வழி ஏற்பாடுகளை கோவிலின்‌ உள்ளே இருந்தவாரே கண்காணித்து உரிய முறையில்‌ மாற்றி அமைப்பது, பக்தர்களின்‌ பாதுகாப்பு கண்கானிப்பது, மற்றும்‌ பக்தர்களிடம்‌ இருந்து திருடும்‌ குற்றவாளிகளை அடையாளம்‌ காண்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்காக இந்த பணிகள்‌ மேற்கொள்ளப்‌பட்டுள்ளது. மேலும்‌ கோவிலில்‌ உள்ள அணைத்து […]