கேரளாவில் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது காற்றிலும் பரவுவதால் , நம்மை தற்காத்து கொள்வது அவசியம்.


கொரோனா இருப்பதற்கான அறிகுறிகள்:
- மூக்கு ஒழுகுதல்
- தலைவலி
- இருமல்
- தொண்டை வலி
- காய்ச்சல்
- உடல்நிலை சரியில்லாத ஒரு உணர்வு
- கொரோனா வைரஸ்கள் சில நேரங்களில் நிமோனியா அல்லது சுவாசக்குழாய் நோய்களை ஏற்படுத்தும். இருதய நோய் உள்ளவர்கள், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள், கைக்குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு இது பரவ வாய்ப்புள்ளது.
கொரோனா வைரஸை தடுக்க நாம் செய்ய வேண்டியவை:
- இதனை கட்டுப்படுத்த முதன்மை வழி எது என்றால் ஒரு மனிதரிடம் இன்னொரு மனிதனுக்கு பரவாமல் தடுப்பதே ஆகும்.
- தும்மலின் போது கைகுட்டை உபயோகிக்கவேண்டும்.
- அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவ வேண்டும்.
- இருமல் அல்லது தும்மும்போது துணியை வைத்து வாயை மூடிக்கொள்ள வேண்டும்
- இருமல் அல்லது மூக்கில் சளி பிரச்சனை இருந்தால் முகமூடியை அணியவேண்டும்.
- மேலிருக்கும் அறிகுறிகளில் ஏதாவது தென்பட்டால் மருத்துவரை உடனடியாக நாட வேண்டும்.
- குடும்ப உறுப்பினர்கள் அல்லது சக பயணிகளுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க வேண்டும்.
- வேகவைக்காத இறைச்சி அல்லது சரியாக சமைக்காத இறைச்சிகளை உட்கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என்று முதலீட்டாளர்கள் அஞ்சுவதால் சீன மற்றும் ஹாங்காங் பங்குகள் வியாழக்கிழமை சரிந்தன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய சுகாதார அவசரநிலை என்று சுகாதார அமைப்பு அறிவித்தால், உலகளாவிய முதலீட்டாளர்களை பெரிதும் பாதித்துள்ளது