திருத்தணியில்‌ போதிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யாததால்‌ கொரானா பரிசோதனைக்கு வராத பொது மக்கள்‌

Tiruttaninews.com
https://www.facebook.com/tiruttaninews
Follow Us On Facebookhttps://www.facebook.com/tiruttaninews

திருவள்ளூர்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து தொகுதிகளிலும்‌ பொதுமக்கள்‌ கொரானா பாசிடிவ்‌ டெஸ்ட்‌ எடுத்துக்கொள்ள மாவட்ட மக்கள்‌ நல்வாழ்வு துறை மற்றும்‌ குடும்ப நலத்துறை சார்பில்‌ நடமாடும்‌ கொரானா மருத்துவ பரிசோதனை வாகனங்கள்‌ ஏற்பாடு செய்யப்‌பட்டது. இந்த வாகனங்கள்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து பகுதிகளுக்கும்‌
சென்று அந்தந்த பகுதிகளில்‌ பொது மக்களுக்கு வழிப்புணா்வு ஏற்படுத்தி அவர்களுக்கு சளி மாதிரிகள்‌ எடுத்து அவற்றை பரிசோதித்து அதில்‌ அவர்களுக்கு கொரானா தொற்று இருந்தால்‌ உடனடியாக அவர்களுக்கு, தகுந்த சிகிச்சசையளிக்க ஏற்பாடு செய்யப்‌படுகிறது. இந்த நிலையில்‌ நலத்துறை சார்பாக உரிய முறையில்‌ தகுந்த பிரச்சாரம்‌ செய்யப்‌படாததால்‌
திருத்தணிக்கு கொரானா பரிசோதனை வாகனம்‌ வந்தாலும்‌ பொது மக்கள்‌ அதில்‌ நாட்டம்‌ காட்டாமல்‌ அங்கு சென்று உரிய பரிசோதனைகள்‌ செய்து கொள்ள வில்லை.மிகவும்‌ குறைவான பொதுமக்களே முன்‌ வந்து பரிசோதனைகள்‌ செய்துகொண்டதால்‌ வாகனம்‌ நின்று இருந்த பகுதி வெறிச்சோடி காணப்‌பட்டது.