திருத்தணி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

Tiruttaninews.com

திருத்தணியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திருத்தணி ஒன்றிய கவுன்சிலர்களின் முதல் கூட்டம் நடந்தது இந்த கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் தங்க தனம் தலைமை தாங்கினார் ஒன்றியக்குழு துணைத்தலைவர் இ. என்.கண்டிகை ரவி முன்னிலை வகித்தார் கூட்டத்தில் திருத்தணி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு  பசுபதி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் ஒன்றிய வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது .இதை தொடர்ந்து திருத்தணி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பதினைந்தாவது நிதிக்குழுவின் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 97 லட்சம் ரூபாய்கள் நிதியை கொண்டு போர்க்கால அடிப்படையில் திருத்தணி ஒன்றிய  ஊராட்சிகளில்  புதிய ஆழ்துளை கிணறுகள் மற்றும் பைப் லைன்கள் அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் மற்றும் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றினார்கள் இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் கருணை அடிப்படையில் கண்ணிகாபுரம் சத்துணவு கூடத்தில் சமையலராக  பணிபுரிய ஆனந்தி என்ற பெண்ணுக்கு பணி நியமன ஆணையை ஒன்றியக்குழு தலைவர் தனம் தனம் துணைத்தலைவர் இ. என் . கண்டிகை ரவி ஆகியோர் வழங்கினார்கள்.