சீனாவில் கொரோனோ வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கடந்த 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சீனா மற்றும் ஹாங்காங்கில் சார்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு 650 பேர் வரை பலியாகினர். வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் இந்நோய் சுவாசத்தில் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தி மனிதர்களில் மரணம் விளைவிக்கும். இந்த நிலையில், சீனாவில் சார்ஸ் SARS வைரசுடன் தொடர்புடைய புதிய வகை கொரோனா வைரஸ் கடந்த வாரத்தில் 140 பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தி இருந்தது. சீன தலைநகர் பெய்ஜிங்கிலும் வைரஸ் பாதிப்பு பரவியது.
இந்த வைரசானது சீனாவின் மத்திய நகரான வூஹானில் முதலில் கண்டறியப்பட்டது. வூஹான் நகரில் மொத்தம் 1.1 கோடி பேர் வசித்து வருகின்றனர். அவர்களில் இந்த வைரஸ் பாதிப்பு பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி உள்ளது. 170 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் அவர்களில் 9 பேர் தீவிர சிகிச்சையும் பெற்று வருகின்றனர். இந்நிலையில், வூஹான் நகர சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், வைரஸ் தாக்குதலுக்கு 89 வயது நிறைந்த 4வது நபர் பலியாகி உள்ளார் என தெரிவித்து உள்ளது. இந்த வைரஸ் வூஹானில் 200 பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.
கொரோனா வைரஸ் என்பது விலங்குகளிடையே காணப்படும் ஒரு பொதுவான வைரஸ்.இது விஞ்ஞானிகளால் ஜூனோடிக் என்று அழைக்கப்படுகின்றது. அதாவது அவை விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவிக்கின்றன.
அறிகுறிகள்:
முதல் அறிகுறியானது இது மக்களை நோய்வாய்ப்படுத்தும்,மற்றும் மிதமான சளி உண்டாகும். மேலும் மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை புண், தலைவலி மற்றும் ஒரு காய்ச்சல் ஆகியவை அடங்கும், இது ஓரிரு நாட்கள் நீடிக்கும்.
பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள், வயதானவர்கள் மற்றும் மிக இளம் வயதினருக்கு இவ்வைரஸ் வேகமாக பரவி நிமோனியா அல்லது , மிகவும் தீவிரமான, சுவாசக்குழாய் நோயை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
Severe acute respiratory syndrome SARS என அழைக்கப்படும் வைரஸ், மிகவும் கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய மற்றொரு கொரோனா வைரஸ் ஆகும். தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட இது சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.மேலும் வயிற்றுப்போக்கு, சோர்வு, மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறு மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும். நோயாளியின் வயதைப் பொறுத்து, SARS உடனான இறப்பு விகிதம் 0-50% வரை அதிகரிக்கிறது.இதில் வயதானவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.
எவ்வாறு பரவுகிறது:
விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் sars வைரஸ் பூனைகளிடம் இருந்து பரவுகிறது என்றும் கூறுகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட நபரை தொடுவதின் மூலமும் பரவுகிறது.இதனை சரி செய்ய குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை என்றும் பெரும்பாலான நேரங்களில் அறிகுறிகள் தானாகவே போய்விடும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.மேலும் ஏராளமான திரவங்களை குடிக்கவும், ஓய்வெடுக்கவும், தூங்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.