Namma Tiruttani @tiruttaninews
tiruttani news

திருத்தணியில் டாக்டர் கெங்குசாமி நாயுடு நினைவு நாள்

Tiruttaninews.com
gengusamy naidu birthday

திருத்தணியில் உள்ள டாக்டர் கெங்குசாமி சாமி நாயுடு மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்க முன்னாள் தலைவர் மறைந்த டாக்டர் கெங்குசாமி நாயுடு அவர்களின் இரண்டாவது வருட நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது . இதையொட்டி பள்ளி வளாகத்தில் டாக்டர் கெங்குசாமி நாயுடு உருவப்படம் வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பள்ளியின் தாளாளர் உமா மகேஸ்வரன், செயலாளர் பாபு ,பொருளாளர் சத்யா , முன்னாள் தாளாளர் ஜெகநாதன், கமிட்டி உறுப்பினர்கள் ராமமூர்த்தி, வினோத் , பள்ளியின் முதல்வர் கனகவல்லி , துணை முதல்வர் வெங்கடேசன் மற்றும் ஆசிரியர்கள் , மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு கெங்குசாமி நாயுடு அவர்கள் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.