தமிழகத்தில் எளிமையாக்கப்பட்ட இ-பாஸ் பெரும் வசதி.10 நிமிடத்தில் இ பாஸ்.

Tiruttaninews.com

தமிழகத்தில் தற்போது இ பாஸ் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதில் மொத்தம் மூன்று பக்கங்கள் உள்ளது. முதல் பக்கத்தில் விண்ணப்பதாரர் பெயர், வாகன எண் விவரங்கள் மற்றும் பயணம் செய்வோர் எண்ணிக்கை உள்ளிடவேண்டும்.

இரண்டாம் பக்கத்தில் இ பாஸ் விண்ணப்பிக்கும் நபரின் முகவரி மற்றும்    செல்லவிருக்கும் இடத்தின் முகவரி  விபரங்களையும்   பதிவு செய்ய வேண்டும்.

மூன்றாம் பக்கத்தில் பயணிக்கும் மற்றவர்களின் பெயர்களையும் , பயணம் செய்வோரின் ஆதார் கார்டு ,ஓட்டுநர் உரிமம்,பான் கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை விவரத்தை  பதிவு  செய்யவேண்டும்.

பின் அரசின் சார்பில் சில நிபந்தனைகள் தெரியப்படுத்தபட்டுள்ளது.பின் இ -பாஸ் உடனே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .