





கொரோன தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக திருத்தணியில் அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இந்த நிலையில் திருத்தணியில் உள்ள ஏழைகளுக்கும் பக்தர்களுக்கும் திருத்தணியில் செயல்பட்டு வரும் கிரீட் தொண்டு நிறுவனம் சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது கிரீட் தொண்டு நிறுவன தலைவரும் திருத்தணி ஒன்றியக்குழு துணைத் தலைவரும் ஆன இ .என். கண்டிகை ரவி தன் சொந்தப் பொறுப்பில் உணவு பொட்டலங்கள் தயாரித்து அவற்றை திருத்தணியில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏழைகளுக்கு காரில் எடுத்துச் சென்று வழங்கினார்.