Namma Tiruttani @tiruttaninews
tiruttani news

நவீன ஸ்மார்ட் டிவிக்குள் மறைந்திருக்கும் ஆபத்து..!

Tiruttaninews.com

புதிதாக வாங்கும் ஸ்மார்ட் டி.விக்கள் மூலம் ஹேக்கர்கள் ஊடுருவி சைபர் குற்றங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ எச்சரித்துள்ளது.  இன்டெர்நெட் பயன்பாடு, முக அடையாள அங்கீகாரம், குரல் மூலம் இயக்குதல் போன்ற பல்வேறு நவீன தொழில் நுட்பங்களுடன் அடுத்த தலைமுறைக்கான ஸ்மார்ட் டிவிக்கள் விற்பனையாகின்றன. இது போன்ற டிவிக்களை பயன்படுத்துவது சவால் நிறைந்தது என்று எப்பிஐ எச்சரித்துள்ளது. 

   கருவிகள் பாதுகாப்பின்றி இருந்தால் ஹேக்கர்கள் ஊடுருவி, சேனல்களை மாற்றுவது, ஒலி அளவை கூட்டுவது, குழந்தைகளுக்கு தேவையில்லாத வீடியோக்களை காட்டுவது போன்றவற்றை செய்ய முடியும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இன்டெர்நட் சேவையை நிறுத்துவதே இப்பிரச்சனைக்கான எளிதான தீர்வு என்று கூறும் நிபுணர்கள், அவ்வப்போது ஸ்மார்ட்டிவி தயாரிப்பாளர்கள் சாப்ட்வேர் அப்டேட் செய்வதும் அவசியமானது என்று வலியுறுத்துகின்றனர்.