திருத்தணி ஏழைகளுக்கு இலவச உணவு வழங்க ஏற்பாடு; முன்னாள்‌ எம்பி கோ.அரி உரிய தொகயை செலுத்தினார்‌.

Tiruttaninews.com

கொரோனோ பாதிப்பு நிவாரண பணிகள்‌ காரணமாக அம்மா உணவகத்தில்‌ ஏழைளுக்கும்‌ பாதசாரிகளுக்கும்‌ தினமும்‌ இலவசமாக உணவு அளிக்கப்‌ ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது . இதையொட்டி வருகிற மே மாதம்‌ 3 ஆம்‌ தேதி வரை ஊரடங்கு உத்தரவு முடியும்‌ வரையில்‌ திருத்தணியில்‌ உள்ள அம்மா உணவகத்தில்‌ ஏழைகளுக்கு இலவச உணவ்ளிக்க முன்னாள்‌ எம்பி கோ.அரி அதற்க்கு உண்டான தொகயை திருத்தணி நகராட்சி ஆணையர் பாகைப்பிரமணியத்திடம்‌ வழங்கினார்‌. இந்த நிகழ்ச்சியின்‌ போது திருத்தணி நகராட்சி முன்னாள்‌ தலைவர்‌ செளந்தாராஜன்‌. விவசாய கூட்டுறவு சங்க
தலைவர் ‌ ஜெயசேகர்பாபு ஆகியோர்‌ உடன்‌ இருந்தனர்‌. இதை தொடர்ந்து திருத்தணியில்‌ உள்ள ஜோதிசாமி தெரு ,ஜோதி நகர்‌.,புதூர்‌ உள்பட பல்வேறு பகுதிகளில்‌ முன்னாள்‌ எம்பி கோ. அரி 600 ஏழைகளுக்கு இலவச அரிசி மற்றும்‌ காய்கறிகள்‌ வழங்கினார்‌.