திருத்தணி அருகே வீட்டில் யாருக்கும் தெரியாமல் குக்கரில் சாராயம் தயாரித்த 3 வாலிபர்களை திருத்தணி போலீசார் கைது செய்தனர். திருத்தணி அருகில் கன்னிகாபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் ரகசியமாக சாராயம் காய்ச்சுவதாக தகவல் அறிந்த திருத்தணி போலீசார் அங்கு சென்று திடீர் சோதனை செய்த போது அங்கு கேஸ் ஸ்டவ் மீது குக்கர் மற்றும் இதர உபகரணங்கள் கொண்டு சாராயம் தயாரிக்கப்படுவதையும் ,அங்கு சாராயம் தயாரிக்க பயன்படும் பொருட்கள் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதை தொடர்ந்து கள்ளச் சாராயம் காய்ச்சியதாக அங்கிருந்த திருத்தணி பகுதியை சேர்ந்த 3 பேரை கைது செய்து அங்கு இருந்த சாராயம் தயாரிக்க பயன் படுத்திய உபகரணங்கள் மற்றும் 20 லீட்டர் சாராய ஊரல், 3 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பரிமுதல் செய்தனர். பிறகு கைதுசெய்ப்பட்ட 3 பேரயும் திருத்தணி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி மேஜிஸ்ட்ரேட் உத்தரவின் பேரில் 15 நாள் காவலில் பொன்னேரி சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப் பட்டனர்.
You may also like
திருத்தணி டிவிஷனில் உள்ள திருத்தணி அத்திமாஞ்சேரிபேட்டை,பூனிமாங்காடு , ஆர்கே.பேட்டை, கொளத்தூர், மாமண்டூர் மற்றும் மேலப்பூடி ஆகிய துணை மின் நிலையங்களில் 18 ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு […]
எப்போதாவது ஒரு எரிகல் வானத்தில் இருந்து விழும்போது அதை நாம் பார்த்துவிட்டால் நம் மனம் எவ்வளவு குதூகலிக்கும், அதுவே ஒரு மணி நேரத்தில் மழைபோல் ஒரு 100-120 வந்து விழுந்துகொண்டே […]
திருத்தணி நவம்பர் 25- திருத்தணி முருகன் கோவிலை சார்ந்த திருவாலங்காட்டில் உள்ள அருள்மிகு வடாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்பத் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பாக நடத்த பட்டது. இந்த விழாவையொட்டி […]
Beta வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸாப்ப் நிறுவனம் Dark theme வசதியை வெளியிட்டது. ( whatsapp 2.20.13 beta) Download Link