Namma Tiruttani @tiruttaninews

மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி ஒன்றியம் சார்பில் கறவை மாடுகள் வாங்க கடன் வழங்க ஏற்பாடு

Tiruttaninews.com

 திருத்தணி செப் 18 காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர்
மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி ஒன்றியம் சார்பில்
திருத்தணி தாலுகா சேர்ந்த 500 பேருக்கு தேசிய
மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கறவை மாடுகள் வாங்க
கடன் வழங்குவதற்கான விழா இன்று புதன் கிழமை காலை
திருத்தணியில் உள்ள எஸ் எஸ் மகாலில் நடந்தது. இந்த
விழாவுக்கு மாவட்ட ஆவின் பால் தலைவர் வேலஞ்சேரி
சந்திரன் தலைமை தாங்கினார் இதில் முக்கிய பிரமுகராக
திருத்தணி எம்எல்ஏ பி எம். நரசிம்மன் கலந்துகொண்டு
தமிழக அரசின் சார்பில் பால் உற்பத்தியாளர்களுக்கு செயல்
படுத்தி வரும் நலத் திட்டங்கள் குறித்து பேசி கறவை
மாடுகள் வாங்க கடன் பெறும் பயனாளிகளிடம் இருந்து
கோரிக்கை மனுக்கள் பெற்றார் விழாவில் திருவள்ளூர்
மாவட்ட பால் வள துணை பதிவாளர் சந்திரசேகரன் பொது
மேலாளர் ராமநாதன் திட்ட மேலாளர் உமா சங்கர் டாக்டர்
ஜெபராணி மற்றும் பயனாளிகள் அகியோர் கலந்து
கொண்டனர் கறவை மாடுகள் வாங்கி பயன் பெறும் பால்
உற்பத்தியாளர்களுக்கு முதல் கட்ட தவனையாக 30
ஆயிரம் ரூபாய் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.