Namma Tiruttani @tiruttaninews
tiruttani 1

வீர பாண்டிய கட்டபொம்மன் ஜெயந்தி விழா

Tiruttaninews.com

திருத்தணி ஜனவரி 3- திருத்தணியில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே வெள்ளையனை எதிர்த்து போரிட்ட உயிர் துறந்த தியாகிவீரபாண்டிய கட்டபொம்மன் 260 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா(பிறந்தநாள் விழா) இன்று சிறப்பாக கொண்டாடப் பட்டது

இதையொட்டி அவரது திரு உருவ படத்திறக்கு மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தப் பட்டது இந்த விழாவுக்குதமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில தலைவர் காஞ்சி காடக முத்தரையர் தலைமை தாங்கி பேசினார். விழாவில் திருத்தணி நகரசெயலாளர் பெரியசாமி ,மாநில துணை தலைவர் பரசுராமன், நிர்வாகிகள் நாகசாமி, ஷன்முகம் ,கோவிந்தசாமி, மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்டனர். விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது