திருத்தணி லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

Tiruttaninews.com

திருத்தணியில் உள்ள சீனிவாசா பாக்கியலட்சுமி திருமண மண்டபத்தில் திருத்தணி தங்க கோபுரம் லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சமூக இடைவெளி பின்பற்றி எளிமையாக நடத்தப்பட்டதது. இந்த விழாவில் சங்க தலைவராக  குப்புசாமி ,செயலாளராக சேஷன் ,பொருளாளராக ராஜசேகர் ஆகியோர் பொறுப்பேற்றனர்.புதிய நிர்வாகிகளுக்கு முன்னாள் தலைவர்கள், இயக்குனர்கள் ,உறுப்பினர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர் .திருத்தணி தங்க கோபுரம் லயன்ஸ் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள குப்புசாமி கூறும்போது ,திருத்தணி நகர பகுதியில் லயன்ஸ் சங்கத்தின் சார்பில்  சங்க உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு ,திருத்தணி பகுதியில் பல்வேறு சேவை பணிகள் சிறப்பாக செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார் .விழாவையொட்டி ஏழைகளுக்கு இலவச அரிசி மற்றும் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.