Namma Tiruttani @tiruttaninews
tiruttani news

இன்று சந்திர கிரகணம்

Tiruttaninews.com

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வான சந்திர கிரகணம், இன்றிரவு ஏற்படுகிறது.  இந்தாண்டு, நான்கு முறை, சந்திர கிரகணம் நடைபெறும் நிலையில், முதல் கிரகணம் இன்று இரவு 10.37 மணி முதல் நாளை அதிகாலை 2.42 மணி வரை நிகழ்கிறது. முழுமையான அளவு, பாதி மற்றும் பெனும்ப்ரல் ((Penumbral)) வகை என 3 வகையான சந்திர கிரகணங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதில் இன்றைய சந்திர கிரகணம் பெனும்ப்ரல் வகையிலானது ஆகும்.  அதாவது பூமியின் நிழல் மிகவும் குறைவான அளவு மட்டுமே, சந்திரனில் விழும்.

இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் அனைத்து பகுதி மக்களும் வெறும் கண்ணால் பார்க்க முடியும். இந்த ஆண்டில் ஜூன் 5, ஜூலை 5 மற்றும் நவம்பர் 30 ஆகிய நாட்களிலும் சந்திர கிரகணம் நிகழும் என கூறப்பட்டு உள்ளது