Namma Tiruttani @tiruttaninews

திருத்தணியில்‌ பெற்றோரை இழந்த சகோதரிகளுக்கு மாவட்ட கலெக்டர்‌ உதவிகள்‌ வழங்கினார்‌; கல்வி உதவி அளிக்க ஏற்பாடு.

Tiruttaninews.com

திருத்தணியில்‌ பெற்றோரை இழந்து தவிக்கும்‌ இரண்டு சகோதரிகளை திருவள்ளூர்‌ மாவட்ட கலெக்டர்‌ மகேஸ்வரி . இன்று (செவ்வாய்க்கழமை) நேரில்‌ சந்தித்து ஆறுதல்‌ கூறி அவர்களுக்கு தமிழக அரசின்‌ சார்பில்‌ உதவி பொருட்கள்‌ வழங்கி அவர்கள்‌ தொடர்ந்து கல்வி பயில முழு உதவிகள்‌ செய்வதாக தெரிவித்து ஆறுதல்‌ கூறினார்‌. இதைப்‌ பற்றிய விவரம்‌ வருமாறு- திருத்தணியில்‌ உள்ள சுப்புராய மேஸ்திரி தெருவை சேர்ந்தவர்‌ ஜெயகாந்தி (வயது55) இவருக்கு வனிதா(வயது15) கிரிஜா (வயது12) என்ற இரண்டு மகள்கள்‌ உள்ளனர்‌. வனிதா திருத்தணியில்‌ உள்ள அரசினர்‌ மகளிர்‌ மேல்‌ நிலைப்‌ பள்ளியில்‌ 10ஆம்‌ வகுப்பு படித்து வருகிறார்‌. கிரிஜா அதே பகுதியில்‌ உள்ள அரசு பள்ளியில்‌ 7 ஆம்‌ வகுப்பு படித்து வருகிறார்‌. ஜெயகாந்தியின் கணவர் சில வருடங்கள்‌ முன்பு தன்‌ மனைவி மற்றும்‌ இரண்டு மகள்களையும்‌ விட்டுவிட்டு எங்கேயோ சென்று விட்டார்‌. அன்று முதல்‌ ஜெயகாந்தி தன்‌ கணவரை பிரிந்து விட்ட நிலையிலும் மனம்‌ தளராமல்‌ திருத்தணியில்‌ உள்ள ஒரு ஹோட்டலில் ‌ கூலி வேலை செய்து கொண்டு தனது மகள்களை படிக்கவைத்து வந்தார்‌. இந்த நிலையில்‌ நேற்றய முன்தினம்‌. ஜெயகாந்திக்கு திடீர் என மூச்சு திணறல் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு திருத்தணி அரசு ‌ மருத்துவமணைக்கு கொண்டு செல்லப்‌ பட்டார்‌. பிறகு அவரை மேல்‌ சிகிச்சைக்காக திருவள்ளூர்‌ அரசு மருத்துவமணைக்கு. கொண்டு சென்றபோது அங்கும்‌ சிகிச்சை பலன்‌ அளிக்காமல்‌ ஜெயகாந்தி பரிதாபமாக உயிர்‌ இழந்தார்‌. இதனால்‌ தாயை இழந்த வனிதா கிரிஜா சகோதரிகளுக்கு அவர்களது வீட்டின்‌ அருகில்‌ உள்ளவர்கள்‌ ஆறுதல்‌ கூறி அவர்களது செலவிலேயே ஜெயகாந்திக்கு ஈமச்சடங்குகள்‌ ‌ நடத்தினார்கள்‌. இந்த சம்பவம்‌ பற்றி வாடஸ்‌ஆப்பிலும்‌ சமூக வலைதளங்களிலும்‌ செய்தி பரவியது. இதை தொடர்ந்து திருவள்ளூர்‌ மாவட்ட கலெக்டர்‌ மகேஸ்வரி இன்று செவ்வாய்க்கிழம காலை திருத்தணிக்கு வந்து வனிதா கிரிஜா சகோதரிகளை நேரில்‌ சந்தித்து அவர்களுக்கு அரசு சார்பில்‌ 25 கிலோ அரிசி மற்றும்‌ பருப்பு வகைகள்‌ ,துணிகள்‌ ,ஆகியவற்றை வழங்கி ஆறுதல்‌ கூறினார்‌. பிறகு. இதைப்பற்றி கலெக்டர்‌ மகேஸ்வரி கூறும்‌ போது, பெற்றோரை இழந்து வாடும்‌ வனிதா , கிரிஜா சகோதரிகள்‌ திருவள்ளூரில்‌ உள்ள அரசு மாணவிகள்‌ விடுதியில்‌ சேர்க்ப்பட்டு அவர்கள்‌ தொடர்ந்து படிக்கவும்‌ உயர்‌ கல்வி பயிலவும்‌ தகுந்த ஏற்பாடு, செய்யப்‌படும்‌ என தெரிவித்தார்‌. அப்போது அவருடன்‌ மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு நல அலுவலர்‌ செந்தில்‌, திருத்தணி ஆர்டிஓ சொர்ணம்‌அமுதா,தாசில்தார்‌ உமா மற்றும்‌ அதிகாரிகள்‌ உடன்‌ இருந்தனர்‌.