Namma Tiruttani @tiruttaninews

திருத்தணியில் இலவச நுரையீரல் சிகிச்சை முகாம்

Tiruttaninews.com

திருத்தணியில் அரக்கோணம் சாலையில் உள்ள பீகாக் மருத்துவமனையில் இலவச நுரையீரல் சிகிச்சை முகாம் சிறப்பாக நடத்தப்பட்டது. பீகாக் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் கிரண் ,நிர்வாக இயக்குனர் டாக்டர் அனுபமா ஆகியோர் தலைமையில் நடந்த இந்த முகாமில் நுரையீரல் மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரபாஷ் உடன் கூடிய மருத்துவ குழுவினர் ஏராளமான நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்தனர். இதையொட்டி முகாமில் கலந்துகொண்ட பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பீகாக் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தங்கள் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.