Namma Tiruttani @tiruttaninews
tiruttani news

இன்று எரிகற்கள் மழை

Tiruttaninews.com

எப்போதாவது ஒரு எரிகல் வானத்தில் இருந்து விழும்போது அதை நாம் பார்த்துவிட்டால் நம் மனம் எவ்வளவு குதூகலிக்கும், அதுவே ஒரு மணி நேரத்தில் மழைபோல் ஒரு 100-120  வந்து விழுந்துகொண்டே இருந்தால் அது பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கும். 
3200 Phaethon என்று அழைக்கப்படும் சிறுகோள் (Asteroid) 1.4 வருடங்கள் என்ற கணக்கிற்கு நம் சூரியனை சுற்றி வருகின்றது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் இந்த 3200 Phaethon கடந்து சென்ற பாதையில் நம் பூமி நுழையும் போது, அந்த சிறுகோளின் துகள்கள் நம் வளிமண்டலத்திற்குள் வரத்துவங்கும், வளிமண்டலம் அதை பூமிக்குள் அனுப்பாமல் மேலேயே எரித்து விடும், இது தான் நம் கண்களுக்கு இயற்கை காட்டும் வாணவேடிக்கை.
எங்கே பார்க்க வேண்டும்?  எப்படி பார்க்க வேண்டும்? நாம் வானை நோக்கும் போது நம் கண்களுக்கு எளிதாக புலப்படுவது  Orion belt ல் ஒரே நேர்கோட்டில் இருக்கும் மூன்று நட்சத்திரங்கள். இதற்கு அருகே தான் Gemini constellation இருக்கிறது. இந்த மூன்று நட்சந்திரங்களை அடையாளமாக வைத்து அதன் அருகில் பார்க்க வேண்டும். டிசம்பர் 4 இது துவங்கினாலும், இதை பார்ப்பதற்கு சரியான நாள் டிசம்பர் 14 சனிக்கிழமை நள்ளிரவு. விடியற்காலை 2 மணி என்பது மிக அருமையான நேரம். ஞாயிறு விடுமுறை என்பதால் கவலைகொள்ள தேவையில்லை.

tiruttaninews.com

ஆனால் இதை நகர விளக்கொளிகளுக்கு மத்தியில் பார்த்தால் நம் கண்களுக்கு நிறைய தெரியாது, ஒரு இருட்டான பகுதியை திட்டமிடுங்கள், பாய், தலையணை,குளிருக்கு இதமான போர்வை போன்றவற்றுடன் வானை நோக்குங்கள், இயற்கையின் வாணவேடிக்கையில் நம் செயற்கை துன்பங்களை சிறிது நேரம் மறக்கலாம்.