Namma Tiruttani @tiruttaninews
tiruttani news

திருத்தணியில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

Tiruttaninews.com

திருத்தணி ஜனவரி17- திருத்தணியில் உள்ள பல்வேறு பகுதிகளில் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஸ்தாபக தலைவரும்ஆன எம்ஜிஆரின் 103 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி திருத்தணியில்உள்ள சித்தூர் சாலை மற்றும் திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய பகுதிகளில் உள்ள எம்ஜி ஆர் சிலைகளுக்கும் மேலும் திருத்தணி சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் அலுவுலகம்முன்னாள் எம்பி கோ அரி அலுவுலகம் ஆகிய இடங்களில் அமைக்கப் பட்டிருந்த எம்ஜிஆர் திரு உருவ படங்களுக்கு திருத்தணி எம்எல்ஏ பிஎம் நரசிம்மன் ,முன்னாள் எம்பி கோ.அரிஆகியோர் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் திருத்தணி நகராட்சி முன்னாள் தலைவர் சௌந்தர்ராஜன். முன்னாள் ஒன்றிய குழு தலைவர் இ.என்.கண்டிகை ரவி நிர்வாகிகள்டி.டி சீனிவாசன் ஜெயசேகர்பாபு பொன்னுரங்கம் குமார் மற்றும் முன்னள் நகர கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு எம்ஜியாருக்குஅஞ்சலி செலுத்தினார்கள். இதே போல திருத்தணியில் உள்ள அணைத்து பகுதிகளிலும் எம் ஜி ஆர் படங்கள் மலர்களால் வைக்கப்பட்டிருந்து பொது மக்கள் அங்கு வந்து மலர்கள் தூவி எம்ஜியாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.