

திருத்தணி அருகில் உள்ள நல்லாட்டூர் ஸ்ரீவீரமங்கள ஆஞ்சநேயர் கோவிலில் ராமர் சன்னிதியில் இன்று சிறப்பு வழிபாடு பூஜைகள் நடத்தப்பட்டது. அயோத்தியில் ஸ்ரீராமர் திருக்கோவில் கட்டுவதறக்கு பூமி பூஜைகள நடந்தததையொட்டி கோவில் திருப்பணிக்காக ஸ்ரீராமன மகன் பெயரில் நல்லாட்டூரில் பாயும் குசஸ்தலை ஆற்றின் புனித மண் கொண்டு வந்து அதனுடன் மங்கள பொருட்கள் சீர் வரிசைகள் ஆகிறவற்றை கோவிலில் உள்ள ராமபிரான் மற்றும் ஸ்ரீ வீரமங்கள ஆஞ்சநேயர் சன்னதிகளில் வைத்து சிறப்பு வழிபாடு பூஜைகள் நடத்தப் பட்டது. இந்த விழாவில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்கரவர்த்தி மேற்பாவையில் கோவில் செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜிக்கப்பட்ட புனித மண் புனித நீர் மங்கல பொருட்கள் சீர் வரிசைகள் மற்றும் வெள்ளி காசுமாலைகள் ஆகியவற்றை அயோதிக்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.