திருத்தணி நீதிமன்றத்தில்‌ 72 வழக்கறிஞர்களுக்கு நிதியுதவி

Tiruttaninews.com

தமிழ்நாடு மற்றும்‌ புதுச்சேரி பார்கவுன்சில்‌ சார்பில்‌ கொரோனா பாதிப்பு ஊரடங்கால்‌ பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு நிதி உதவி வழங்கும்‌ நிகழ்ச்சி திருத்தணி நீதிமன்ற வளாகத்தில்‌ நடந்தது. இந்த நிகழ்ச்சியில்‌ பார்கவுன்சில்‌ தலைவர்‌ அமல்ராஜ்‌ கலந்துகொண்டு சிறப்புறையாற்றி அதன்பிறகு திருத்தணி நீதிமன்ற சார்பு நீதிபதி மணிகன்டன்‌, மேஜிஸ்ட்ரேட்‌ லோகநாதன்‌ ஆகியோருடன்‌ இணைந்து தேர்வு செய்யப்‌பட்ட 72 வழக்கறிஞர்களுக்காக தலா 4 ஆயிரம்‌ ரூபாய்‌ விதம்‌ அதற்க்குண்டான காசோலைகளை வழக்கறிஞர்கள்‌ சங்க நிர்வாகிகளிடம்‌ வழங்கினார்‌.

இந்த நிகழ்ச்சியில்‌ அரசு வழக்கறிஞர்‌ ராஜபாண்டியன்‌. திருத்தணி பார்‌ அசோசியேஷன்‌ தலைவர்‌ வேலாயுதம்‌ செயலாளர்‌ ஜமுனா. வழக்கறிஞர்கள்‌ சங்க தலைவர்‌ லட்சுமணன்‌. செயலாளர்‌ புருஷோத்தமன்‌. லாயர்கள்‌ சங்க தலைவர்‌ ஸ்ரீனிவாசன்‌ செயலாளர்‌ பாஸ்கரன்‌. பள்ளிப்பட்டு வழக்கறிஞர்கள்‌ சங்க தலைவர்‌ ஜான்‌
செயலாளர்‌ அந்தோனி மற்றும்‌ மூத்த வழக்கறிஞர்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.