திருத்தணி அடுத்த தும்பிகுளம் கிராமத்தில் கூட்டுறவு பால் சங்கம் இயங்கி வருறது. இங்கிருந்து, தினமும், 900 லிட்டர் பால், திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஆவின் பால் குளிரூட்டும் சங்கத்திற்கு அனுப்பப்படுகிறது.
இந்திலையில், ஒரு வாரமாக, காக்களூருக்கு அனுப்பப்படும் பால், தரம் குறைவு என, தும்பிகுளத்திற்கு திருப்பி அனுப்புகின்றனர். இதனால், அதிருப்தியடைந்த பால் உற்பத்தியாளர்கள், நேற்றுகாலை, தும்பிகுளம் பஸ் நிறுத்தம் அருகே சாலையில், 600 லிட்டர் பாலை கொட்டி, ஆர்ப்பாட்டம், சாலை மறியலில். ஈடுபட்டனர்.
திருத்தணி போலீசார் சமரசத்தை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.