



திருத்தணி பிப்27:- திருத்தணியில் உள்ள தளபதி வினாயகம் வினாயகம் மேல்
நிலைப்பள்ளியின் 25 ஆம் ஆண்டுவிழா மற்றும் ம் மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு விழா சிறப்பாக நடந்தது. இந்த விழாவிற்கு பள்ளியின் அறக்கட்டளை நிறுவனரும் முன்னாள் எம்பி யும் . ஆன கிருஷ்ணசுவாமி. பள்ளியின்
செயலாளரும் ஆரணி பாராளுமன்ற தொகுதி உறுப்பினரும் ஆன விஷ்னுபிரசாத் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பள்ளியின் தாளாளர் பாலாஜி முன்னிலை வகித்தார்.விழாவில் முக்கிய பிரமுகராக அண்ணா பலகலை கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் விஸ்வநாதன் கலந்து கொண்டு வாழ்த்துறை வழங்கி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் பரிசுகள் வழங்கினார். விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. விழாவில் பள்ளி கமிடடி உறுப்பினர்கள ஆசிரியர்கள் பெற்றோர்கள் அகியோர் கலந்துகொண்டனர்.