திருத்தணி ரோட்டரி சங்கத்தின் சார்பில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் சிறப்பாக நடத்தப்பட்டது.இதையொட்டி திருத்தணியில் உள்ள ரயில் நிலையம் பேருந்து நிலையம் மற்றும் நகரிலுள்ள பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்களில் திருத்தணி ரோட்டரி சங்க தலைவர் ஹரி குமார் சர்மா தலைவர் கௌதம் சந்த் பொருளாளர் முனி கிருஷ்ணா முன்னாள் தலைவர்கள் டாக்டர் மோகனன் .ராசி ராஜேந்திரன் இயக்குனர் பேனர் பாஸ்கர் முன்னாள் உறுப்பினர் ஏகாம்பரம் மற்றும் பலர் கலந்து கொண்டு ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து வழங்கினார்கள் இதேபோல திருத்தணி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் சிறப்பாக நடத்தப்பட்டது இந்த முகாம்கள் வாயிலாக ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.






















இந்த முகாம்களில் கலந்துகொண்டு சேவை புரிந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.