திருத்தணி பீகாக் மருத்துவமனையில் மனிதநேய ரத்ததான முகாம்

Tiruttaninews.com

திருத்தணியில் உள்ள  பீகாக் மருத்துவமனையில் மனிதநேய ரத்ததான முகாம் சிறப்பாக நடத்தப்பட்டது . பீகாக் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் கிரண்  தலைமையில் நடந்த இந்த ரத்ததான முகாமில்  திருவள்ளூர் மாவட்ட சந்தானம்  ரசிகர் மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு அரசு உத்தரவின்படி சமுதாய இடைவெளி கடைபிடித்து ரத்ததானம் அளித்தனர். இந்த முகாமில் சென்னை நங்கநல்லூர் ரோட்டரி ரத்த வங்கியின் மருத்துவர் டாக்டர் புகழேந்தி தலைமையில் வந்திருந்த மருத்துவ குழுவினர் ரத்ததானம் சேகரித்து அவர்களுக்கு மருத்துவம் அளித்தனர் . இந்த முகாமில் மொத்தம் 40 யூனிட்டுகள் ரத்த தானமாக பெறப்பட்டது.  இதைத்தொடர்ந்து ரத்ததானம் அளித்தவர்களுக்கு பீகாக் மருத்துவமனை தலைவர் டாக்டர் கீரன் ரோட்டரி ரத்த வங்கியின் மருத்துவர் டாக்டர் புகழேந்தி ஆகியோர் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்கள் .இந்த ரத்ததான முகாமில் திருத்தணி ரோட்டரி சங்க தலைவர் Rtn Advt G.ஹரிகுமர் சர்மா பொருளாளர் Rtn A.L.முனி கிருஷ்ணா பீகாக் மருத்துவமனையின் மேலாளர்  ரகு   நர்சிங் சூப்பர டென்ட் நிர்மலா தேவி ..சந்தானம் ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் தர்மன்  பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு சேவை புரிந்தனர்.