திருத்தணி ஜனவரி 24- திருத்தணியில் உள்ள வட்டார போக்குவரத்துஅலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா நடத்தப்பட்டது. இதையொட்டி ஏற்பாடு செய்யப் பட்ட விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஏராளமான வாகன ஓட்டிகள் மற்றும் பெண்கள் ஆகியோர் தலைக்கவசங்கள் அணிந்து கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் திருத்தணி ஆர் டி ஓ கார்த்திகேயன் ,டிஎஸ்பி சேகர் ,வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து விழிப்புணர்வுஊர்வலம் தொடக்கி வைத்தனர்.திருத்தணி நகர முக்கிய சாலைகள்வழியாக நடந்த இந்த ஊர்வலத்தில் மாணவர்கள் வாகன ஓட்டிகள் சாலைபாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு அளித்தனர்.
You may also like
திருவள்ளுர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக மாவட்டதிலுள்ள வழிபாட்டு தலங்கள்; கடந்த நான்கு மாதங்களாக தற்காலிகமாக […]
திருத்தணி ஜனவரி17- திருத்தணியில் உள்ள பல்வேறு பகுதிகளில் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஸ்தாபக தலைவரும்ஆன எம்ஜிஆரின் 103 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி […]
திருத்தணியில் அரக்கோணம் சாலையில் உள்ள பீகாக் மருத்துவமனையில் இலவச நுரையீரல் சிகிச்சை முகாம் சிறப்பாக நடத்தப்பட்டது. பீகாக் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் கிரண் ,நிர்வாக இயக்குனர் டாக்டர் அனுபமா ஆகியோர் […]