
தமிழ் கடவுள் முருகப் பெருமான் அருள் பாலிக்கும் 6 திருத்தலங்களில் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஐந்தாவது திருத் தலமாக திகழ்கிறது திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த பிறகு சினம் தணிந்து திருத்தணியில் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் புரிவதால் இத்தளத்திற்கு தணிகை எனப் பெயர் வந்தது.அருணகிரிநாதர் கச்சியப்ப முனிவர் பாம்பன் சுவாமிகள் மற்றும் பல கவிஞர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இத்திருக்கோவில் பற்றி பாடல்கள் எழுதியுள்ளனர்.
தமிழ்நாடு அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் இயங்கி வரும் இத்திருக்கோயில் ஆனது சென்னையில் இருந்து 85 கிலோமீட்டர் தொலைவிலும் காஞ்சிபுரத்திலிருந்து 33 கிலோமீட்டர் தொலைவிலும் திருவள்ளூரில் இருந்து 38 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. திருத்தணி முருகப்பெருமானின் மலைக்கோவில் ஆனது இயற்கை சூழ்ந்த மலைகளின் நடுவே அழகாக அமைந்துள்ளது. மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் வகையில் சரவணப்பொய்கை பிரதான படிகட்டுகள் வழி நரசிம்மன் சுவாமி கோயில் தெரு யானை பாதை வழியே மற்றும் மேல் திருத்தணி நலன்குளம் படிக்கட்டுகள் வழி உள்ளது மேலும் வாகனங்கள் வழியாக மலைக்கோயிலுக்கு செல்ல வழி உள்ளது. மேலும் வாகனங்கள் வழியாக மலைக்கோயில் செல்ல மலைப்பாதை வழியுள்ளது.

திருமுருகனின் கோயிலில் பக்தர்களுக்கான சுவாமி தரிசனம் விடியற்காலை தினமும் ஐந்து முப்பது முதல் இரவு 8 45 வரை உள்ளது இக்கோவிலில் மூலவர் முருகப் பெருமான் சன்னதி அம்பாள் சன்னதி உற்சவர் சண்முகர் சன்னதி ஆபத்சகாய விநாயகர் சன்னதி சிவபெருமான் சன்னதிகள் உள்ளன. இத்திருக்கோயிலில் தினமும் சுவாமிக்கு பல்வேறு அபிஷேக வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன. கோவில் சார்பில் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.இத்திருக்கோயிலில் கிருத்திகை திருவிழா தை கிருத்திகை விழா ஆடி கிருத்திகை விழா கந்த சஷ்டி விழா தமிழ் புத்தாண்டு விழா ஆகியவை சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.இந்த விழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பலர் காவடிகள் கொண்டு வந்து சுவாமியை தரிசித்து செல்கிறார்கள்.


திருத்தணி ரயில் நிலையம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து மலைக்கோயிலுக்கு செல்ல ஆட்டோ வசதிகளும் உள்ளது. இத்திருக்கோயிலின் சார்பில் இயங்கிவரும் குடில்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.


Temple Worship Timings is 5:45 AM to 8:45 AM
Pooja Timings
Pooja | Time |
---|---|
Vishvaruba Dharsanam | 06.00 A.M |
Kala Sandhi Pooja | 08.00 A.M |
Uchala kala Pooja | 12.00 P.M |
Sayaratchai Pooja | 05.00 P.M |
Ardhajama Pooja | 08.00 P.M |
Palliarai Pooja | 08.45 P.M |
Kalasandhi Pooja
Period | Time |
---|---|
Sunday Morning | 05.00 A.M |
Tuesday Morning | 05.00 A.M |
Abishekam And Archanai Fees
Pooja | Amount |
---|---|
Panjamiruthia Abisegam | 1500 Rs |
Thirukalyanam urchavam | 2000 Rs |
Sandhanakaapau | 4000 Rs |
Thanga Kavasam | 500 Rs |
Keadayam Urchavam | 1000 Rs |
Golden Chariot | 2000 Rs |
Velli Thear Urchavam | 3500 Rs |
Velli Myil And Other Vechicel | 3500 Rs |
Sahacranama Archanai | 400 Rs |
Monthly Kriuthikai Ticket (One year) | 500 Rs |
Annadhannam(Per Day) | 2500 Rs |
Annadhannam (Yearly Once) | 25000 Rs |