Namma Tiruttani @tiruttaninews
tiruttani news

தங்க ஆபரண அலங்காரத்தில் காட்சியளித்த முருகப் பெருமான்

Tiruttaninews.com

திருத்தணி டிசம்பர் 31- திருத்தணி அருள்மிகுசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்றுசெவ்வாய்க்கிழமை காலை திருப்படி திருவிழா சிறப்பாக தொடங்கியது இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து சென்றனர் இந்தநிலையில் பிரதி வருடம் ஏற்பாடு செய்வது போல இந்த வருடமும் அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுரை முருகப் பெருமானுக்கு உற்சவம் மிகவும் விலை உயர்ந்த தங்க ஆபரண அலங்காரம் செய்து கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் சிறப்பு சன்னிதி ஏற்பாடு செய்யப்பட்டது. வருடத்தில் ஆடிகிருத்திகை திருவிழா மற்றும் படிபஜனை திருவிழா நாட்களில் மட்டுமே இந்த சன்னதி ஏற்பாடு செய்யப் படுவது வழக்கமாகும் ஆகவே கோவிலக்கு வரும் பக்தாகள் தங்க அபரங்களுடன் காட்சியளிக்கும் முருகப் பெருமமானை பக்தியுடன் வழிபட்டு சென்றனர்.