Namma Tiruttani @tiruttaninews
tiruttani news

திருத்தணியில் ஒன்றியக்குழு தலைவருக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது

Tiruttaninews.com

திருத்தணியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று நடக்க இருந்த ஒன்றியக்குழு தலைவருக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது இதன் விவரம் வருமாறு திருத்தணி ஒன்றியத்தில் 12 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த வாரம் நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் 12 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இவர்களில் திருத்தணி ஒன்றிய குழு தலைவரின் தேர்தல் இன்று நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது காலை 11 மணிக்கு கவுன்சிலர்கள் அனைவரும் ஆஜராகி ஒன்றியக்குழு தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் 11 30 மணி வரை எந்த ஒரு கவுன்சிலரும் வராததால் திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து குறிப்பிட்ட நேரத்தில் கவுன்சிலர்கள் யாரும் வராததால் ஒன்றிய குழு தலைவருக்கான தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறது என்றும் இதன் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் உரிய தகவல் பெற்று மறு தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளே சென்று விட்டனர் மேலும் இதன் தொடர்பாக ஒலிப்பெருக்கி வாயிலாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது இதைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் சென்றனர் இதனால் திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் வெறிச்சோடி கிடந்தது.