Namma Tiruttani @tiruttaninews
tiruttani 1

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்பத் திருவிழா

Tiruttaninews.com

திருத்தணி நவம்பர் 25- திருத்தணி முருகன் கோவிலை சார்ந்த திருவாலங்காட்டில் உள்ள அருள்மிகு வடாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்பத் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பாக நடத்த பட்டது. இந்த விழாவையொட்டி கோவிலில் உள்ள மூலவர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப் பட்டு வழிபாடு பூஜைகள் நடத்தப் பட்டது. இதைதொடர்ந்து அருள்மிகு வடாரண்யேஸ்வரர் மற்றும் வண்டார் குழலி அம்மன் உற்சவ மூர்த்திகளை பல்லக்கில் வைத்து திருக்கோவில்தேர் வீதிகளில் ஊர்வலம் நடத்தப் பட்டது. இதை தொடர்ந்து கோவில் அருகே உள்ள சென்றாடு தீர்த்த குளத்தில் தண்ணீர் மிகவும் குறைவாக இருந்தால் குளத்தின் அருகே சிறப்பு மேடைஏற்பாடு செய்யப் பட்டு அங்கு வடாரண்யேஸ்வரர் மற்றும் வண்டர்குழலி அம்மன் சன்னதி அமைத்து சுவாமிக்கும் அம்மனுக்கு வழிபாடு பூஜைகள் நடத்தப்பட்டது. விழாவையொட்டி சிறப்பு ஆன்மீக இசை கச்சேரி நிகழ்ச்சி நடத்தப்பட்டது .

விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்களுக்கு கோயில் சார்பில் பல்வேறு ஆன்மீக தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் அன்னதானம் வழங்கப் பட்டது. விழாவில் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தன் உத்தரவின் பேரில் திருத்தணிடி. எஸ் பி சேகர் மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது விழாவுக்கு தேவையான எற்பாடுகளைதிருத்தணி முருகன் கோவில் தக்கார் ஜெயசங்கர் இணை ஆணையர் பழனி குமார் ஆகியோர் செய்திருந்தனர்.