திருத்தணியில் கொரோனா வைரஸ் தடுப்பு, தீவிர நடவடிக்கைகள். திருத்தணி நகரம் மற்றும் திருத்தணி டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. பொது மக்கள் அத்தியாவசிய பணிகளுக்கு தவிர யாரும் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு அதை நடைமுறைபடுத்தும் வகையில் நகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். திருத்தணி நகராட்சி சார்பில் சுகாதாரம் மற்றும் தூய்மை பணியாளர்கள் நகரின் முக்கிய பகுதிகளில் நின்று கொண்டு அந்த வழியில் வரும் வாகனங்கள் மீது கிருமிநாசினி மருந்து தெளித்து அனுப்புகின்றனர் . அதே போல திருத்தணி தீ அணைப்பு துறையினர் தங்களது தீ அணைப்பு வாகனங்களில் கிருமி நாசினி மருந்துகள் கலந்த தண்ணீரை ஏற்றிக்கொண்டு திருத்தணி அரசு மருத்துவமணை, நகர பேருந்து நிலையம் மற்றும் முக்கியமான பகுதிகளில் கிருமி நாசினி மருந்துகளை பீச்சி அடித்து வருகிறார்கள். அதே போல திருத்தணி திருப்பதி தேசீய நெடுஞ்சாலையில் தமிழக எல்லையான பொன்பாடி சோதனை சாவடி அருகே திருத்தணி டிஎஸ்பி சேகர் தலைமையில் போலீசாரும் மற்றும் மருத்தவ குழுவினரும் 24 மணி நேரமும் அங்கு முகாமிட்டு ஆந்திராவில் இருந்து வரும் சரக்கு லாரிகளை சோதனையிட்டு அவற்றின் மீது கிருமி நாசினி மருந்துகள் வாகன ஓட்டிகளுக்கு தகுந்த அறிவுரைகள் கூறி அதன் பிறகு அவை செல்ல அனுமதிக்கிறார்கள். மேலும் திருத்தணி எம்.எல்.ஏ பி.எம்.நரசிம்மன் , பொன்பாடி சோதனை சாவடி அருகே அமைக்கப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனை முகாமில் பார்வையிட்டு , அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் மருத்துவ பனி குறித்து கேட்டறிந்தார். தற்போது கொரானா வைரஸ் குறித்து பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைந்து காணப்படுகிறார்கள்.
You may also like
திருத்தணியில் உள்ள எம்ஜிஆர் நகரில் வசிக்கும் நரிக்குரவர் இன மக்களுக்கு கொரோன நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. திருத்தணி ‘ ரோட்டரி சங்கம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சமூக […]
திருத்தணி ஜனவரி 9 – திருத்தணி உள்ள சில கடைகளில் அரசால் தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்கபடுவதாக திருத்தணி நகராட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து திருத்தணி […]
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் தற்போது . கொரோனோ வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் திருத்தணியில் உள்ள முதியோர் மற்றும் ஏழைகள் […]
திருத்தணி நவம்பர் 10- திருத்தணியில் உள்ள அக்கய்ய நாயுடு ரோட்டில்தணிகாசல அம்மன் கோவில் அருகே ஒரு கடையில் அதிக அளவில் !பிளாஸ்டிக் பொருட்கள் விற்க்கப்பட்டு வருவதாக திருத்தணி நகராட்சிஅலுவுலகத்துக்கு ரகசிய […]