Namma Tiruttani @tiruttaninews
tiruttani news

திருத்தணி நகருக்கு 109 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ பாலாறு குடிநீர் திட்டம்,முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சிமூலம்‌ தொடங்கி வைத்தார்‌.

Tiruttaninews.com

முருகப்‌ பெருமான்‌ அருள்பாலிக்கும்‌ ஆறு திருத்தலங்களில்‌ ஐந்தாவது திருத்தலமாக திகழும் திருத்தணியில்‌ 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்‌ வசித்து வருகிறார்கள்‌. மேலும்‌ இங்குள்ள முருகன்‌ கோவிலுக்கு ‌ஆயிரக்கணக்கான பக்தர்கள்‌ வந்து முருகப்‌ பெருமானை தரிசித்து செல்வதும்‌ வழக்கமாகும்‌. இதனால்‌ இங்குள்ள மக்கள்‌ தொகைக்கு ஏற்றவாறு குடிநீர்‌ வினியோகம்‌ செய்வதில்‌ அவ்வப்போது தடங்கல் ‌ ஏற்படுகிறது. இதை தொடர்ந்து திருத்தணியில்‌ ஏற்படும்‌ குடிநிர்‌ தட்டுப்‌ பாட்டை போக்கும்‌ வகையில்‌ தமிழக அரசின்‌ சார்பில்‌ 109 கோடியே 68 லட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ பாலாறு குடிநீர்‌ திட்டம்‌ ‌ இன்று தொடங்கி வைக்கப்பட்டது .
இதையொட்டி இன்று (27-07-2020) திங்கட்கிழமை காலை சென்னை கோட்டையில்‌ இருந்து முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம்‌ திருத்தணி பாலாறு குடிநீர்‌ திட்டத்தைதொடங்கிவைத்தார்‌. அதே நேரத்தில்‌ திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில்‌ ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணொளி காட்சி நிகழ்ச்சியில்‌ திருவள்ளூர்‌ மாவட்ட கலெக்டர்‌ மகேஸ்வரி, திருத்தணி எம்‌எல்‌ஏ பிஎம்நரசிம்மன்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ இரண்டு பேர்‌ ஆகியோர்‌ திருத்தணிக்கு பாலாறு குடிநீர்‌ திட்டம்‌ நிறைவேற்ற நிதி ஒதிக்கீடு செய்த முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து பிறகு. மேடையில்‌ அமைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கை ஏற்றிவைத்தனர்.

Follow us On Facebook

இந்த நிகழ்ச்சியில்‌ தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய கண்காணிப்பு பொறியாளர் பாபு ,செயற்பொறியாளர்‌ வேல்முருகன் ‌ ,திருத்தணி ஆர்டிஓ சொர்ணம்‌ அமுதா, தாசில்தார்‌ உமா, மாவட்ட ஆவின்‌ தலைவர்‌ வேலஞ்ரேரி சந்திரன்‌, திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள்‌ பாபு, பசுபதி ,திருத்தணி நகராட்சி ஆணையர்‌ பாலசுப்ரமணியன் மற்றும்‌ அதிகாரிகள்‌ கலந்துகொண்டனர்‌.