

தமிழகத்தில் கொரானா பாதிப்பு காரணமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் திருத்தணியில் 800 குடும்பங்களுக்கு உதவும் வகையில் திருத்தணி பெரியார் நகர் பகுதியில் உள்ள 800 குடும்பங்களுக்கு திருத்தணி நகராட்சி முன்னாள் தலைவர் சௌந்தரராஜன் தன் சொந்த பொறுப்பில் இலவச அரிசி மற்றும் காய்கறிகள் மளிகை சாமான்கள் மற்றும் ஆகியவற்றை வழங்கினார். இதற்காக திருத்தணி பெரியார் நகர் தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அரக்கோணம் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திருத்தணி கோ ஹரி கலந்துகொண்டு ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி தொடங்கிவைத்தார். இதே போல் மகாவிஷ்ணு நகரிலுள்ள பொதுமக்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருத்தணி ஒன்றிய குழு துணைத் தலைவர் என் என் கண்டிகை ரவி ,மாவட்ட முன்னாள் கவுன்சிலர் டி டி சீனிவாசன் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சேவை புரிந்தனர்.