







திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிகிருத்திகை திருவிழா இன்று மிக எளிமையாக நடத்தப் பட்டது. முருகப் பெருமானின் ஐந்தாவது திருத்தலமாக திகழும் திருத்தணி முருகன் கோவிலில் பிரதி வருடம் ஆடிகிருத்திகை திருவிழா மற்றும் தெப்பத் திருவிழா ஆகியவை மிக சிறப்பாக நடக்கும். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானுக்கு மலர். காவடிகள் மற்றும் தலைமுடி காணிக்கை செலுத்தி வழிபடுவார்கள். ஆனால் இந்த வருடம் கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழக அரசு உத்தரவின் பேரில் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக கோவில் நடை சாத்தப்பட்டுள்ளது. கோவிலில் வழிபாடு பூஜைகள் மட்டும் தினமும் நடத்தப் பட்டு வருகிறது.ஆனால் பக்தர்களுக்கு கோவிலில் சுவாமி தரிசனம் மற்றும் வழிபாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.இந்த நிலையில் முருகப்பெருமானின் ஆடிகிருத்திகை திருவிழா மற்றும் தெப்ப திருவிழா ஆகியவை இன்று, தொடங்கியது. வெளி ஊர்களிளல் இருந்து பேருந்துகள் மற்றும் சிறப்பு ரெயில் இயக்கப்படாததாலும் பக்தர்களுக்கு கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லாததாலும் இந்த வருடம் திருத்தணி நகரம் முழுவதும் ஆடிகிருத்திகை விழா கலை இழந்து காணப் பட்டது. பக்தர்கள் யாரும் மலைக் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப் பட்டு கோவிலுக்கு செல்லும் அனைத்து பாதைகளும் அடைக்கப் பட்டது.இதனால் சில பக்தர்கள் கோவில் படிக்கட்டுகள் வரை நடந்து வந்து தேங்காய் உடைத்து தங்கள் நேர்த்திக் கடன் செலுத்தி திரும்பி சென்றனர். அதே நேரத்தில் மலைக் கோவிலில் ஆடிகிருத்திகை திருவிழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு பூஜைகள் நடத்தப் பட்டது. அதே போல கோவிலில் உள்ள ஷன்முகர் மற்றும் வள்ளி தெய்வயானை உடனுரை உற்ச்சவர் முருகப்பெருமானுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு பூஜைகள் நடத்தப் பட்டது. இதை தொடர்ந்து இன்று மாலை கோவிலின் இரண்டாவது பிராகாரத்தில் உள்ள யாகசாலை பகுதியில் சிநிய அளவிலான நீர் தொட்டி அமைத்து அதில் சிறிய தெப்பம் ஏற்பாடு செய்து அதில் மலங்காரம் செய்யப்பட்ட உற்ச்சவரை வைத்து மிக எளிமையான முறையில் தெப்பல் திருவிழா நடத்தப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெயசங்கர் இணை ஆணையர் பழனிகுமார் ஆகியோர் செய்து இருந்தனர்.