

திருத்தணி அருகே கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்க்காக தண்ணீர் டேங்கரில் 3 ஆயிரம் லீட்டர் ஊரல் சாராயம் பதுக்கிய 2 நபர்களை மது விலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்தனர். திருத்தணி அருகில் உள்ள பொன்பாடி மேட்டு காலனியில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு உதவி போலீஸ் சூப்பர்டென்ட் கல்பனா உத்தரவின் பேரில் திருத்தணி மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி தலைமையில் தலைமை காவலர்கள் வேலு, மனோகரன், ராஜசேகர் ,நீலகண்டன் ஆகியோர் கொண்ட தனி படையினர் மேட்டுக் காலனிக்கு சென்று அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போது அந்த பகுதியில் 6 ஆயிரம் லீட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் டேங்கர் இருப்பதும் அதில் இருந்து சாராய வாடை அடிப்பதும் கண்டு போலீசார் அந்த குடிநீர் டேங்கரை திறந்து பார்த்த போது அதன் உள்ளே 3 ஆயிரம் லீட்டர் ஊரல் சாராயம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அதை உடனே பறிமுதல் செய்தனர். இதன் தொடர்பாக காசிநாதபுரத்தை சேர்ந்த ரவி (வயது 48) மற்றும் மேட்டு காலனியை சேர்ந்த, சிவகாமி(வயது 28) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிவிட்ட கோதன்டராமாபுரத்தை, சேர்ந்த ஜார்ஜ் (வயது40) என்பவரை வலை விசி தேடி வருகிறார்கள். போலீசார் விசாரணையில் யாருக்கும் சந்தேகம் வராதபடி. குடிநீர் டேங்கரில் ஊரல் சாராயம் பதக்கி வைத்து தினமும் தேவைக் கேற்ப அதில் இருந்து ஊரல் சாராயத்தை எடுத்து கள்ளச் சாராயம காய்ச்சி வந்தது தெரிய வந்தது. கைது செய்யப் பட்டவர்களை போலீசார் திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மேஜிஸ்ட்ரேட் உத்தரவின் பேரில் 15 நாள் காவலில் திருத்தணி ஜெயிலில் அடைத்தனர்.