Namma Tiruttani @tiruttaninews

குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திரு பி.எம்.நரசிம்மன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

Tiruttaninews.com

திருத்தணி நகராட்சிக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூபாய் 115 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் பணிகளில், திருத்தணி நகரம் இந்திரா நகரில் 10.4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து *அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளரும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான திருமிகு பி.எம்.நரசிம்மன் அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் சித்தூர் சாலையில் பைப்லைன் அமைக்கும் பணியையும் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகர ஆணையர் பாலசுப்ரமணியம், நகர பொறியாளர் திருச்செல்வம் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள், முன்னாள் நகர செயலாளர் கருணாகரன், அம்மா பேரவை செயலாளர் சேஷன், முன்னாள் நகர பொருளாளர் செல்வகுமார், வட்ட செயலாளர்கள் அன்பு, ரமேஷ், ராமு, சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.