திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடத்த முக்கோட்டி கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சமூக இடைவெளி, முக கவசம் அணியாமல் மலைக்கோவிலில் குவிந்தனர். பொதுவழியில், மூன்று
நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.வைகுண்ட ஏகாதசி மறு நாள் வரும் கிருத்திகை, முக்கோட்டி கிருத்திகை என அழைக்கப்படுகிறது. அந்த வகையில், நேற்று முக்கோட்டி கிருத்திகை விழாவையொட்டி, திருத்தணி முருகன் கோவிலில் அதிகாலை, 5:௦௦ மணிக்கு,மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து தீபாராதனை நடத்தது. காலை, 9:30 மணிக்கு,
காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கிருத்திகை விழாவையொட்டி, நேற்று காலை, 6:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.