160 நாட்களுக்கு பிறகு திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திறக்கப்பட்டது.

Tiruttaninews.com
Follow Us On Facebook Tiruttani News

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 160 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக இன்று கோவில் நடை திறக்கப்பட்டது.பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றி கோவிலுக்கு உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலில் மூலவர் முருகப் பெருமானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் கோவிலிலுள்ள விநாயகர் உற்சவர், வள்ளி தெய்வயானை மற்றும் சண்முகர்சன்னதிகளில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.பக்தர்கள் மிகுந்த பரவசத்துடன் சுவாமியை தரிசனம் செய்து சென்றனர்.கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வெப்பமானி பரிசோதனை செய்து அவர்கள் கைகளில் கிருமிநாசினி மருந்து அளிக்கப்பட்டு, அதன்பிறகு கோவிலுக்கு உள்ளே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக கோவில் விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும், சமூக இடைவெளி பின்பற்றி சுவாமி தரிசனம் செய்து சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும் என கோவில் தக்கார் ஜெயசங்கர் ,இணை ஆணையர் பழனிக்குமார் தெரிவித்தனர்.