Namma Tiruttani @tiruttaninews
tiruttani 1

திருத்தணி நகர வளர்ச்சிக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்

Tiruttaninews.com

திருமுருகன் அருள் பாலிக்கும் ஆறுபடை வீடுகளில் திருத்தணி
ஐந்தாவது திருத்தலமாக திகழ்கிறது திருத்தணி நகராட்சியில் உள்ள
வார்டுகளில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து
வருகின்றனர். அது மட்டுமல்லாமல் திருத்தணி முருகன்
கோவிலுக்கு தமிழகம் அந்திர உள்ளபட பல்வேறு பகுதிகளில்
இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள் அதே
போல திருத்தணி சுற்றுப்புர பகுதிகளில் இருந்து பொது மக்கள்
பல்வேறு பணிகள் நிமித்தமாக இங்கு வந்து செல்கின்றனர்.
இன்னிலையில் வளர்ந்து வரும் திருத்தணி நகரத்திற்க்கு
தேவையான வளர்ச்சி பணிகளை நிதிநிலைக்கு ஏற்ப திருத்தணி
நகராட்சி செவ்வனே செய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்ட
ஆட்சி தலைவர் மகேஸ்வரி அவர்களின் உத்தரவின் பேரில
திருத்தணி நகராட்சி ஆணையர் திருமதி ராஜலட்சுமி
மேற்பார்வையில் நகர்புற சாலை உட்கட்டமைப்பு பணிகள் செயல்
படுத்தப் பட்டு வருகிறது மேலும் தேசிய நகர்புற வாழ்வாதார திட்ட
பணிகள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவு
மேலாண்மை பணிகள் மாநில பேரிடர் மேலாண்மை திட்டத்தின்
கீழ் வரட்சி நிவாரண பணிகள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும்
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிகளின் கீழ் நகர
வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகள் மற்றும் பொது நிதியின்
கீழ் வளர்ச்சி பணிகள் என பல் வேறு பணிகள் நடத்தப்
பட்டுள்ளது நகரின பல்வேறு பகுதிகளில் சாலை வசதி குடிநீர்
சதி சுகாதார வசதி மின் விளக்கு ஆகியவை செயல் படுத்த
பட்டு வருகிறது பொது மக்களுக்கு குடிநீர் பிரச்சனைகள் ஏற்படும்
போது அதற்க்கான உடனடி தீர்வு காணப் படுகிறது திருத்தணி நகர
வளர்ச்சி பணிகள் குறித்து நகராட்சி ஆணையர் திருமதி !
ராஜலட்சுமி கூறியதாவது திருத்தணி நகர வளர்ச்சிக்காக அரசு
நலத்திட்டங்கள் சிறப்பாக செயல் படுத்த பட்டு வருகிறது. நகர்
நீர் ஆதாரத்தை மேம் படுத்தம் வகையில் இங்குள்ள நல்ல
தண்ணீர் குளம் கொட்டு குளம் ராமஜெயகுளம் ஆகியவற்றிய தார்
வாரப்பட்டு மழை நீர் சேகரிக்கப் பட்டுள்ளது. அதே போல மேல்
திருத்தணியில் உள்ள நல்லாள் குளத்திறக்கு அருகில் மலைகளில்
இருந்து அதிக அளவில் மழை நீர் வந்து சேரும் வகையில்
அங்குள்ள நீர் வரத்து கால்வாய் மராமத்து பணிகள்
மேற்கொள்ளப் பட்டது இதனால் இந்த குளத்தில் அதிக அளவில்
மழை நீர் சேர்ந்துள்ளது. அதே போல தமிழக அரசின் உத்தரவு
டேரில் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்து
மழை நீர் சேகரிக்க வேண்டும் என பொது மக்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு அறிவுறத்தப் பட்டுள்ளது
இதனால் தற்போது திருத்தணி நகரில் நீர் மட்டம் பெருகி உள்ளது
நகரின் தாய்மை மற்றும் சுகாதார பணிகளுக்கான தனியாக
ஆட்கள் நியமிக்கப் பட்டு நகரில் அனைத்து பகுதிகளுக்கும்
தினமும் சென்று பொதுமக்களிடம் இருந்து அவர்கள் வீடுகளில்
சேரும் குப்பைகளை வாங்கி அவற்றை பேட்டரியால் இயங்கும்
வாகனங்களில் எடுத்து செல்லும் படி ஏற்பாடு செய்ப்பட்டு அந்த
பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. மாவட்ட ஆட்சித் தலைவரின்
உத்தரவின் பேரில் திருத்தணி நகராட்சி சார்பில் திருத்தணியில்
டெங்கு காய்ச்சல் தடுக்கும் வகையில் பள்ளி மானாவர்களுக்கும்
பொது மக்களுக்கும் நில வேம்பு கசாயம் வழங்கப் பட்டு
வருகிறது. மேலும் இதன் தொடர்பாக கொசுக்களை ஒழிக்கும்
வகையில் நகரின் அனைத்து பகுதிகளிலும் புகை மூட்டம் (பாகிங்)
மற்றும் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் போன்ற பணிகள்
மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அதே போல மாவட்ட நிர்வாகம்
சார்பில் திருத்தணி நகராட்சியில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள்
நடத்தப் பட்டு வருகிறது. திருத்தணி நகர வளர்ச்சிக்கு சுகாதாரம்
பணிகளுக்கும் நகராட்சிக்கு பொது மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு
தரவேண்டும் என என கூறினார